samedi 1 décembre 2012

ஏக்கம் நுாறு [பகுதி - 19]




ஏக்கம் நுாறு [பகுதி - 19]
 
வண்ணமலா்த் தோட்டத்தில் குயில்கள் கூவும்!
     மகரந்த மதுவருந்தி மயங்கும் வண்டு!
எண்ணமலா் பறித்திடவே கிளிகள் கொஞ்சும்!
     இளஞ்சிட்டு கதைபேசி இன்பம் எய்தும்!
தண்ணமலா் கற்பனைகள் உலகைத் தாண்டும்!
     தவமிருந்து தமிழணிகள் என்முன் ஆடும்!
உண்ணமலா் கேட்கின்றேன்! பெண்ணே! ஆற்றில்
     ஓடுமலா் போலின்றி உதவி செய்க! 79

கண்ணைமலா் என்பேனா? அழகைக் காக்கும்
     கருவூலம் என்பேனா? கருத்தை ஈா்க்கும்
பண்ணைமலா் என்பேனா? பாடும் இன்பப்
     பண்ணைமலா் என்பேனா? அவள் நடக்கும்
மண்ணைமலா் என்பேனா? மனம் மயக்கும்
     மனத்தைமலா் என்பேனா? மெய் மணக்கும்
பெண்ணைமலா் என்பேனா? அனிச்சம் போன்றே
     மென்மைமலா் என்பேனா? பெருகும் ஏக்கம்! 80

அன்புக்கே ஏங்குகிற அகத்தை ஏனோ
     அல்லலுறப் செய்வதுமேன்? ஆசை மேவி
இன்புக்கே ஏங்குகிற இதயம் என்றே
     இழிவாகப் பார்ப்பதுமேன்? ஒன்றாய் வாழ
முன்புக்கே இறைபோட்ட முடிகள் தம்மை
     முறைதிங்கு வெறுப்பதுமேன்? செடிபோல் வாடும்
துன்புக்கே இருப்பிடமாய் என்னை ஆக்கித்
     துாயவளே செல்வதுமேன்? ஏங்கும் நெஞ்சே! 81
                                        (தொடரும்)

3 commentaires:

  1. என்னே வர்ணனை...!

    வாழ்த்துக்கள் ஐயா...
    த.ம.1

    RépondreSupprimer

  2. வணக்கம்!

    மழையோ! புயலோ! என்றாலும்
    வலைக்கு வருவார் தனபாலா்!
    இழையோ? துணியோ? என்றாய்ந்ததே
    இனிய கருத்தை எழுதிடுவார்!
    பிழையோ? பிணியோ இருக்குமெனில்
    பிரித்துக் காட்டி விளக்கிடுவார்!
    தழையோ தழையோ எனத்தழைக்கும்
    தமிழைக் கண்டு வியக்கின்றேன்

    RépondreSupprimer
  3. அருமை ஐயா..! வார்த்தைகளால் வர்ணனை செய்து, உயிரோட்டம் கொடுக்க முடியும் என்பதை தங்கள் கவிதை நிரூபித்துவிட்டது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..!

    RépondreSupprimer