mardi 18 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 2]



புதியதோர் உலகைச் செய்க!

அறமே ஆள! அமுதுாறும்
    அருளே சூழ! உலகொளிரும்
திறமே மேவ! அறிவொளிரும்
    செயலே ஆழ! செந்தமிழின்
குறளே உலகப் பொதுமறையாய்க்
    கொண்டே செழிக்க! அலகிலா
மறமே! மாலே! மண்ணுலகை
    மாண்பில் மணக்க வடித்திடுக!

(தொடரும்)

8 commentaires:

  1. உங்கள் எழுத்து எப்போதும்-
    இனிப்புதானய்யா...

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      தீமறிந்த சொற்காடு! கவிதைப் பூக்கள்!
      சீரறிந்த காப்பியங்கள்! செம்மை நுால்கள்!
      யாமறிந்த மொழிகளிலே தமிழைப் போன்றே
      இனிப்புடைய வேறுமொழி இல்லை என்றான்
      ஓமறிந்த திருஞானச் செல்வம் நல்கும்
      ஒப்பில்லா உயா்தமிழே! எங்கள் வாழ்வே!
      தாமறிந்த வலைநாடி கருத்தை நல்கும்
      தமிழ்ச்சீனி! கவித்தேனி வளா்க நன்றே!

      Supprimer
  2. அழகு தமிழில் கவிதை காண்பது என்பது அரிதான இக்காலத்தில், இணையத்திலே கவிதை படைத்து, உலகம் முழவதும் செந்தமிழைச் சிறக்கச் செய்யும் தங்களின் பணி பாராட்டுக்குரியது..

    கவிதை... இன்னும் என் மனதில் களம் அமைத்து, கோலாகலமாய் விழா செய்துகொண்டிருக்கிறது..

    பகிர்வினுக்கு மிக்க நன்றி கவிஞர் அய்யா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கவிதைக் களமமைத்துத் காத்திடுவோம் தோழா!
      புவியைத் தமிழால் புனைந்து!

      Supprimer
  3. எம் உயிரிலும் மேலான தமிழ் மொழிமேல் உள்ள
    பற்றினால் உருவான இன்பக் கவிதை அருமை !...
    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா ......

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உயிராய் உடலாய் ஒளிர்தமிழே! என்னுள்
      பயிராய் வளா்க படா்ந்து!

      Supprimer
  4. tதமிழ் மணக்கிறது தங்கள் கவிதையில்

    RépondreSupprimer
  5. '' குறளே உலகப் பொதுமறையாய்! ''....
    நிறமே நினைக்க மகாசக்தி.
    திறமே வினையாகில் - மனிதம்
    புறமே போகாது காத்திடுமே!
    நன்றி அரும் தமிழுக்கு.

    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer