ஏக்கம் நுாறு [பகுதி - 25]
மூக்கென்ன? முழியென்ன? மலா்கள் சூடி
மூக்கென்ன? முழியென்ன? மலா்கள் சூடி
முகில்தவழும்
குழலென்ன? செந்தேன் சிந்தும்
நாக்கென்ன? நலமென்ன? மோகம் மூட்டி
நடைபோடும்
நளிவென்ன? நேராய்ச் செல்லும்
வாக்கென்ன? வடிவென்ன? விரிந்து பூத்த
வண்ணமலா்
மார்பென்ன? கூா்கொண் டுள்ள
ஊக்கென்ன என்பதுபோல் ஒளிரும் பார்வை!
உணா்வேறி
உருகுதடி ஏங்கும் நெஞ்சே! 91
உனைப்பெற்ற பெற்றோரை வணங்கி நிற்பேன்!
ஒப்பில்லாப்
பேரழகாய் உன்னைத் தந்தார்!
எனைப்பெற்ற பெற்றோரை என்ன வென்பேன்?
ஈடில்லாப்
பெருங்கவியின் ஆற்றல் ஈந்தார்!
பனைபெற்ற வன்கரையை அறிக்கும் நீா்போல்
படா்ந்துள்ள
என்மார்பைத் தாக்கும் கண்கள்!
மனைபெற்ற அரும்மாண்பைச் செழிக்கச்
செய்யும்
மாமழையே!
மாதவமே! ஏங்கும் நெஞ்சே! 92
படிப்பதுபோல் ஏடுகளைத் திருப்பி, ஓரப்
பார்வையினை
வீசுகின்றாள் என்னை நோக்கி!
அடிப்பதுபோல் முறைக்கின்றாள்!
சுரக்கும் அன்பை
அடியோடு
மறைக்கின்றாள்! கனியைத் தொட்டுக்
கடிப்பதுபோல் காட்டுகின்ற காட்சி
கண்டு
கருத்துணா்ந்து
கவிபாடக் கம்பன் வேண்டும்!
குடித்ததுபோல் பெரும்போதை உற்றே
நாளும்
கூத்தாடித்
துள்ளுகிறேன்! ஏங்கும் நெஞ்சே! 93
தொடரும்)
அருமையான இக் கவிதை வரிகளைத் தேடாத தேனீக்கள் கண்டு மனம் வாடுதையா .....இன்பக் கவிதை வடிக்கும் தங்கைகள் இதயத்தை வணகுகின்றேன்.... வாழிய நீ பல்லாண்டு!...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வாடும் அம்பாள் மனங்குளிர
வழங்கும் கவிதை! பொன்பொருளைத்
தேடும் உலகில், செந்தமிழைத்
தேடும் உன்னை வணங்குகிறேன்!
ஆடும் ஆட்டம் அடங்கிவிடும்
அல்லல் அகன்று ஓடிவிடும்!
நாடும் ஓருநாள் என்கவியை
நன்றே தலையில் தாங்கிடுமே!
கனியைத் தொட்டுக்
RépondreSupprimerகடிப்பதுபோல் காட்டுகின்ற காட்சி கண்டு
கனியா...?
சினேகா வளையலை அல்லவா கடிக்கிறாள்...?
Supprimerவணக்கம்!
துவளும் செடிகள் தழைத்தோங்கும்!
சுடா்மின் கொடியாள் வருகையிலே!
அவளின் கண்கள் அளிக்கின்ற
அமுதை அள்ளி அருந்தியதால்
நவிலும் சொற்கள் தடுமாறும்
நன்றே போதை ஏறியதால்!
தவழும் குழந்தை மனமேந்தித்
தந்த கவியில் பிழையுண்டோ?
மழைபோல் பொழியும் கவிமழையில்
Supprimerமனங்கள் மலர்ந்து நனைகின்றன!
தழைபோல் அளித்தப் படத்தினிலே
தாங்கள் சொன்ன கருத்தைப்போல்
இழைபோல் சற்றும் இல்லையென்றே
எழுத்தில் நானோ பதித்திட்டேன்!
பிழைபோல் அதனைக் கொள்ளாமல்
புலவர் என்னைப் பொறுத்திடுக!
Supprimerவணக்கம்!
அவள்விழி தந்த போதையினால்
அவள் காட்டும் வளையல் அவனுக்குக் கனியாகத் தெரிகிறது!
கள்ளின் போதை தலைக்கேறிக்
கண்கள் சொக்கும்! இமைமூடும்!
சொல்லின் போதை தலைக்கேறிச்
சுரக்கும் கவிதை மதிமயக்கும்!
வில்லின் கூா்மை அவள்விழிகள்!
விளைத்த போதை! கவியென்னைச்
எள்ளின் அளவை மலையாக்கும்!
ஏந்தும் வளையல் கனியாக்கும்!