Affichage des articles dont le libellé est பாவலர். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est பாவலர். Afficher tous les articles

samedi 17 février 2024

பாவலர் உடுவிலுார்க் கலா

 பாவலர் பயிலரங்க உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

.

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தமாயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் ஐந்நுாறு விருத்தங்கள் பாடித் தொடர்கின்ற திருமிகு உடுவிலுார்க் கலா அவர்களுக்குப் பாவலர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறோம்.

.

பற்றுடன் பைந்தமிழைக் கற்றுப் பயிலரங்கில்

பொற்புடன் பாடிப் புகழுற்று, - நற்றவத்தால்

பாவலர் ஆகிப் பசும்உடுவி லுார்க்கலா

மாவளம் காண்க மகிழ்ந்து!

.

பாவலர் பட்டம் பெற்ற திருமிகு உடுவிலுார்க் கலா அவர்களுக்குப் பாவலர் பயிலரங்க உறவுகள் விருத்தப்பாவில் ஒரு பக்க வாழ்த்து கவிதை  பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

.

திருவள்ளுவர் ஆண்டு 2055/கும்பம் [மாசி] 02

14.02.2024

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் பிரான்சு

mercredi 8 novembre 2023

பாவலர்மணி மாலதி திரு

 


வணக்கம்

.

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தம் ஆயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற பாவலர் மாலதி திரு அவர்களுக்குப் பாவலர்மணி பட்டம் வழங்குகிறோம்.

.

உயர்வுற வேண்டுமென ஒண்டமிழைக் கற்றுப்

பெயருறப் பெற்றார் பெருமை! - உயிருடன்

மாமரபைப் சூடிய மாலதியார் வாழ்கவே!

பாமரபைப் போற்றிப் பணிந்து!

.

பாவலர்மணி பட்டம் பெற்ற மாலதி திரு அவர்களுக்குப் பாவலர் பயிலரங்கம் சார்பாக வெண்பா மாலை சாத்த விரும்புகிறேன்.  பாவலர் பயிலரங்க உறவுகள் ஓர் வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

08.11.2023

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாவலர்மணி கலைப்புட்பா

 


வணக்கம்

.

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தம் ஆயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற பாவலர் கலைப்புட்பா அவர்களுக்குப் பாவலர்மணி பட்டம் வழங்குகிறோம்.

.

பண்பாடும் பாட்டரங்கில் பற்றுடன் கற்றாயே!

பெண்பாடும் மேன்மையைப் பெற்றாயே! - மண்பாடும்

வண்ணம் கலைப்புட்பா வாழியவே! எந்நாளும்

தண்ணம் தமிழ்போல் தழைத்து!

.

பாவலர்மணி பட்டம் பெற்ற கலைப்புட்பா அவர்களுக்குப் பாவலர் பயிலரங்கம் சார்பாக வெண்பா மாலை சாத்த விரும்புகிறேன்.  பாவலர் பயிலரங்க உறவுகள் ஓர் வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

08.11.2023

 

பாவலர்மணி வா. சண்முகனார்

 


வணக்கம்


பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தம் ஆயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற பாவலர் வா. சண்முகனார் அவர்களுக்குப் பாவலர்மணி பட்டம் வழங்குகிறோம்.


சொல்லும் மணம்வீசத் தொன்மைத் தமிழ்பேச

வெல்லும் விருத்தம் விளைத்திட்டார்! - பல்லாண்டு

வாழ்கவே சண்முகனார்! வல்லபுகழ்ப் பாமணியாய்ச்

சூழ்கவே மேன்மை தொடர்ந்து!


பாவலர்மணி பட்டம் பெற்ற வா. சண்முகனார் அவர்களுக்குப் பாவலர் பயிலரங்கம் சார்பாக வெண்பா மாலை சாத்த விரும்புகிறேன்.  பாவலர் பயிலரங்க உறவுகள் ஓர் வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.


பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

08.11.2023