samedi 31 mai 2014

புன்னகைப் பூவே!




புன்னகைப் பூவே!

எடுப்பு!

புன்னகைப் பூவே! புன்னகைப் பூவே! - நெஞ்சுள்
பொங்கிவரும் பொற்றமிழ்ப் பாவே!
                                  (புன்னகை)

தொடுப்பு

மென்னடை யோடு மின்னிடை கண்டு - சந்தம்
மீட்டுகிறான் சீர்தொடுத்து இக்கவிக் கோவே!
                                  (புன்னகை)

முடிப்பு

இலக்கணம் கற்றவள்! இலக்கியம் பெற்றவள்! - நீ
தலைக்கனம் இன்றியே தமிழ்மணம் உற்றவள்!
சிலையென நின்றவள்! சிந்தையை வென்றவள்! - நீ
அலையென ஆசைகள் அளித்தெனைக் கொன்றவள்!
                                  (புன்னகை)

தேன்கவி என்றவள்! தீங்கனி என்றவள்! - நீ
நான்கவி பாடிட நற்றமிழ் தந்தவள்!
மான்விழி கொண்டவள்! வான்மழை போன்றவள்! - நீ
ஊன்பெறும் உயிர்பெறும் உணர்வென வந்தவள்!
                                  (புன்னகை)

என்னெனச் சொல்வதோ? ஏதெனச் சொல்வதோ? - பாயும்
மின்விழி கணைகளை எப்படி வெல்வதோ?
பொன்னெனக் கொள்வதோ? புகழென ஏற்பதோ? - நலம்
பொழிந்திடும் தைமகள் புதல்வியாயச் சேர்ப்பதோ?
                                  (புன்னகை)

உன்னுரு கண்டுளம் உருகுவ தேனடி? - மின்னும்
பொன்னுரு முழுவதும் புவிதழ்த் தேனடி!
என்னுயிர் புகுந்துள இன்னொளி நீயடி! - உன்
மென்மடி பெற்றதும் நான்சிறு சேயடி!
                                  (புன்னகை)

சிரிப்பினைக் கண்டதும் சிதறுதே நெஞ்சம்! - மலர்
விரிப்பினைக் கண்டதும் விளையுதே மஞ்சம்!
தரித்துனைக் கொண்டதும் ஆசைகள் கொஞ்சும்! - அன்பே
தனித்துனைக் கண்டதும் அவைகடல் விஞ்சும்!
                                  (புன்னகை)

01.06.2014

vendredi 30 mai 2014

நல்ல மருந்து



கன்னியின் கண்கள் கவிதைப் பெருந்தோட்டம்!
பொன்னில் பதித்த புதுமுத்து! - இன்றமிழ்ப்
பாவலன் சொல்கின்றேன்! பாவையின் பார்வையோ
மாவளம் நல்கும் மருந்து!

30.05.2014

திருஅருட்பா அரங்கம் - 7

திருவருட்பா முற்றோதல் அரங்கம் - 7


samedi 24 mai 2014

கோபம் ஏனடி?



கோபம் ஏனடி?

கோபம் ஏனடி? - பொய்க்
கோலம் ஏனடி? - கண்ணே...  
                                                                                                   (கோபம்)

தொடுப்பு

தீபம் நீயடி! - என்
தீபம் நீயடி! - பெண்ணே...
                           (கோபம்)

முடிப்பு

கொஞ்சும் கிளியே! கொள்ளை அழகே! -  இளம்
வஞ்சிக் கொடியே! வண்ண மயிலே!
விஞ்சும் சுவையில் விளைந்த கனியே! - என்
நெஞ்சுக் குள்ளே நிறைந்த தமிழே! ...என்மேல்
                                        (கோபம்)

கொடியும் தானே கொழித்து வளரும்! - பூஞ்
செடியும் தானே செழித்து மலரும்!
விடியும் பொழுதும் விரையும் நதியும் - தாமே
தொடரும் செயலாய்ப் படரும் உறவே! ...என்மேல்
                                        (கோபம்)

மண்ணை வெறுக்கும் மழையும் உண்டோ? - நம்
கண்ணை வெறுக்கும் கலையும் உண்டோ?
விண்ணை வெறுக்கும் விண்மீன் உண்டோ? - நற்
பண்ணை வெறுக்கும் புலவன் உண்டோ? ...என்மேல்
                                        (கோபம்)

வண்டை வெறுக்கும் மலரும் உண்டோ? - சுவை
கண்டை வெறுக்கும் நாவும் உண்டோ?
தண்டை வெறுக்கும் காலும் உண்டோ? - உயர்
தொண்டை வெறுக்கும் உலகம் உண்டோ? ...என்மேல்
                                        (கோபம்)

அன்பைப் பொழியும் அருளே! அழகே! - வான்
அமுதைப் பொழியும் அறமே! அறிவே!
இன்பைப் பொழியும் நிலவே! நினைவே! - வாழ்வு
இயலைப் பொழியும் வரமே! வாழ்வே! ...என்மேல்
                                        (கோபம்)

22.05.2014

mercredi 21 mai 2014

பெண்ணுாிமை - பகுதி 1

பட்டி மண்டபம்
பொண்ணுாிமைக்குத் தடையாக இருப்பவா் 
ஆண்களா? பெண்களா? - பகுதி - 3


பெண்ணுாிமை - பகுதி 3

பட்டி மண்டபம்
பொண்ணுாிமைக்குத் தடையாக இருப்பவா் 
ஆண்களா? பெண்களா? - பகுதி - 3



நன்மொழியாள்




நன்மொழியாள்!

எடுப்பு

நன்மொழிப் பெண்ணே! - இன்பப்
பொன்மழை பொழியுதே உன்னொளிர் கண்ணே!
                                        (நன்மொழி)

தொடுப்பு

என்னுயிர் ஆனாய்! இனித்திடும் செந்தேனாய்! - உன்னை
எழுதிடும் கவிகள் மின்னிடும் விண்மீனாய்!
                                        (நன்மொழி)

முடிப்பு

வலைவிரித்துப் பேசும் விழியே வா!வா! - கவிதைக்
கலைவிரித்து வீசும் மொழியே வா!வா!
சிலைவடித்து மின்னும் அழகே வா!வா! - கூந்தல்
தலைமுடித்துப் பின்னும் அமுதே வா!வா!
                                        (நன்மொழி)

சிட்டழகு காட்டிச் சிந்தை புகுந்தாய்! - தேன்
மெட்டழகு மீட்டி விந்தை புரிந்தாய்!
கட்டழகு காட்டிக் கண்ணுள் நுழைந்தாய்! - இளம்
மொட்டழகு காட்டி மோகம் பொழிந்தாய்!
                                        (நன்மொழி)

உனையெண்ணித் பாடும் சொற்கள் இனிக்கும்! - நீ
உட்கார்ந்து செல்லும் கற்கள் மணக்கும்!
மனையெண்ணி ஆசைப் பூக்கள் சிரிக்கும்! - கூடும்
வினைபின்னி இளமை பாக்கள் விரிக்கும்!
                                        (நன்மொழி)

ஊற்றாகப் பொங்கும் உன்றன் நினைவு! - அன்பே
உறவாடிப் பொங்கும் காதல் கனவு!
ஆற்றாகப் பொங்கும் அகத்துள் உணர்வு! - கண்ணே
அமுதாகப் பொங்கும் அன்பின் புணர்வு!
                                        (நன்மொழி)

கூரியநுண் பார்வை அம்பாய்க் குத்தும்! - புது
வீரியமென் கூட்டில் விளைந்து முற்றும்!
சீரியநற் பணிகள் செழித்து நிற்கும்! - கலை
தேறியஎன் னெஞ்சம் திளைத்துச் சொக்கும்!
                                        (நன்மொழி)

பொன்னெழிலைக் கண்டு புலமை பெருகும்! - மனம்
மென்னடையைக் கண்டு வியந்து உருகும்!
அன்பமுதைக் கண்டு ஆடிப் பருகும்! - தினம்
உன்னுடலைக் கண்டு உயிரும் சொருகும்!
                                        (நன்மொழி)

21.05.2014

lundi 19 mai 2014

புகைப்படம்

கவிஞா் கி. பாரதிதாசன் தலைமையில்
பிரான்சு வொரெயால் தமிழ்க்கலாச்சார மன்றம்
நடத்திய பட்டி மன்றம்
17.05.2014

பெண்ணுாிமைக்குப் பொிதும் தடையாக இருப்பவா் 
ஆண்களா? பெண்களா?

ஆண்களே என்ற அணியில் கவிஞா் சரோசா தேவராசு, திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால், கவிஞா் அருணாசெல்வம் ஆகியோர் பேசினா்.

பெண்களே என்ற அணியில் கவிஞா் பாரீசு பார்த்தசாரதி, திருமிகு நெடுமாறன், திருமதி மலா்வாணி செயராசு ஆகியோர் உரை வழங்கினா்





vendredi 16 mai 2014

மலரா? நிலவா?




மலரா? நிலவா?

எடுப்பு

உன்றன் மொழியென்ன தேனா? - அன்பே
ஒளிரும் விழியென்ன மீனா?
                           (உன்றன்)

தொடுப்பு

மின்னும் முகமென்ன மலரா? - அந்த
விண்ணில் வலம்வந்த நிலவா?
                           (உன்றன்)

முடிப்பு

மெல்லிய பார்வையில் சொல்லிய பாக்கள் - என்
மேனியில் தோன்றுதே உணர்வெனும் பூக்கள்!
பல்லியல் கற்றுள பாவையுன் ஆக்கம் - நான்
படித்திடப் படித்திடப் பசியினைச் சேர்க்கும்!
                                           (உன்றன்)

கொஞ்சிடும் கிளியென விஞ்சியே நின்றாய் - தோப்பில்
கூவிடும் குயிலெனத் தமிழிசைக் கின்றாய்!
வஞ்சி..நீ கொஞ்சியே நெஞ்சினை வென்றாய் - பின்ஏன்
வாடிட வாடிடப் பிரிந்து..நீ சென்றாய்?
                                           (உன்றன்)

என்னடி உன்னெழில் பொன்னடி மின்னும் - உள்ளம்
இன்னடி கவிகளை இசையுடன் பின்னும்!
மின்னடி மீட்டியே நடைதரும் அன்னம் - என்னுள்
நன்வழி நல்கியே நலமெலாம் மன்னும்!
                                           (உன்றன்)
16.05.2014

lundi 12 mai 2014

அன்னை குறள்

 அன்னை குறள்


அன்பென்னும் சொல்லை அளித்தவள் அன்னை!இங்(கு)
இன்தேன் இணையோ இயம்பு?

அம்மா எனும்சொல்லே ஆனந்தம்! ஆனந்தம்!
இம்மா நிலத்தில்ஏ(து) ஈடு?

ஒருபிடிச் சோற்றையும் உண்ணென ஊட்டி
இருந்தாள் பசியால் இருண்டு!

என்னையே எண்ணி இருந்தவள்! என்மனனே
அன்னையே தெய்வமென ஆடு!

நான்வாழ வேண்டி நலந்தரும் கண்ணனிடம்
ஊன்வாடி நின்றாள் உறைந்து!

என்பிள்ளை.. என்பிள்ளை.. என்றோதும் அன்னையவள்
இன்சொல்லை எந்நாளும் ஏத்து!

நினைவுகள் குன்றும் நிலையடைந்தும் தன்சேய்க்
கனவுகள் காண்பாள் கமழ்ந்து!

தாய்நாடு தாய்மொழி என்றுரைத்தால் நம்முடைய
வாய்நாடும் இன்ப வளம்!

அயல்நாட்டில் வாழ்ந்தாலும் அன்னையின் எண்ணம்
துயர்ஓட்டிக் காக்கும் துணை!

என்னென் றுரைத்திடுவேன்? ஏதென் றெழுதிடுவேன்?
அன்னைச்சீர் ஆழ்கட லாம்!

11.05.2014

dimanche 11 mai 2014

கலந்துரையாடல்

[திரு வை. நாராயணசாமி, நீதியரசா் முருகபூபதி, திருமிகு சாம்ராஜ்]

[முனைவா் அறிவுநம்பி, கவிஞா் கி. பாரதிதாசன், பேராசிாியா் எ.மு. இராசன்]

புதுவைத் தமிழ் அன்பா்களுடன் கலந்துரையாடல்

புதுவையிலிருந்து தமிழ்ச் சுற்றுலா வந்திருந்த நீதியரசா் முருகபூபதி, திருமிகு வை. நாராயணசாமி, முனைவா் அறிவுநம்பி, பேராசிாியா் எ.மு.இராசன். திருமிகு சாம்ராஜ், பேராசிாியா் அறிவுநம்பி சரவணன், திருமதி அறிவுநம்பி சித்ரா, திருமதி நாராயணசாமி ஆகியோருக்கு 10.05.2014 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்குப் பிரான்சு கம்பன் கழகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முனைவா் அறிவுநம்பி அவா்கள் கம்பன் கவிதைகளில் எப்படிப் பொருள் பார்க்க வேண்டும், எப்படிப் பார்க்கக் கூடாது என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினாா். முனைவா் அவா்கள் தம்முரையில் தமிழகத்தில் இருந்து வருகின்றவா்களுக்குப் பிரான்சில் முக்கியமாகப் பார்க்க வேண்டி இடங்களின் பட்டியலில் பிரான்சு கம்பன் கழகத்தின் பெயரையும் இனிச் சோ்க்க வேண்டும் என்று கூறினாா்.

நீதியரசா் முருகபூபதி அவா்கள் கம்பனும் அருணகிாி நாதரும் என்ற தலைப்பில் ஒப்பாய்வு நிகழ்த்தினாா், பல அாிய சொற்களுக்குப் பொருளுரைத்து மழை போன்று அவா் பொழிந்த தமிழுரையில் கம்பன் அன்பா்கள் நனைந்து மகிழ்வுற்றனா்.

திருமிகு வை. நாராயணசாமி அவா்கள் கம்பனில் ஆன்மா என்ற தலைப்பில் வாழ்வியல் தத்துவங்களை உரைத்தார்!

இவ்வரங்கிற்குக் கம்பன் கழகத்தின் தலைவா் கவிஞா் கி. பாரதிதாசன் தலைமையேற்க, கழகத்தின் இணைசெயலாளா் கவிஞா் வே. தேவராசு வரவேற்புரை நிகழ்த்த, கழகத்தின் பொருளாளா் தணிகா சமரசம் நன்றியுரை வழங்கினாா்,

வலையின் கீழே புகைப்படங்கள் இணைத்துள்ளேன்



vendredi 9 mai 2014

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 29



நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

இளமதி வணக்கம்!

கோடுகள் கோலமிடக் கொண்ட கலையொளிக்கு
ஈடுகள் உண்டோ இயம்பு!

கனவுகள் ஆயிரம் காட்டும் கவிதை
மனத்தைக் கிழிக்கும் வலி!

வற்றிய கண்கள் வடித்துள்ள சொல்யாவும்
முற்றிய பாட்டின் மொழி!

படித்ததை நெஞ்சுள் படிந்ததைத் தந்தீா்!
மடித்ததைக் காக்கும் மனம்

10.02.2013

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

இன்றமிழ் மாலதிக்கு என்வணக்கம்! நன்றிகள்!
உன்றமிழ்த் ஓங்கி உயருகவே! - நன்றே
வலைச்சரம் காட்டும் மணமிகு பூக்கள்!
கலைச்சரம் காட்டும் கமழ்ந்து!

19.02.2013

-------------------------------------------------------------------------------------------------
வணக்கம்
நல்ல பதிவை நலமுற தந்துள்ளீா்
வல்ல திறனை வகுத்து!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

அருமையொளிர் ஆக்கத்தை ஆய்தே அளித்து
பெருமையொளிர் பேற்றைப் பெருக்கு!

நாட்டின் நிலையை நவின்றுள்ளீா்! இன்றமிழ்
ஏட்டின் இனிமை இசைத்து!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

மழைக்கால முத்தங்கள் நெஞ்சமெனும் மன்றில்
இழைந்தாடும் என்றும் இனித்து!

மீண்டும் எழுவோம்! விளைந்த துயருக்கு
வேண்டும் உலகில்  விடை!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

வெளியில் வாழ்வைத் தொலைத்துவிட்டு
இருட்டில் தேடுகிறார் வாழ்வை

என்ற புதுக்கவிதை உண்டு!

என்மக்கள் திரைப்படம் ஒருகலை
அதுவே வாழ்வன்று என்ற தெளிவைப் பெறும்வரை 
இதுபோன்ற பதிவுகள் தொடரவே செய்யும்

இருட்டை வாழ்வின் பேரொளியாய்
எண்ணும் தமிழா் தெளிவுறுக!
சுருட்டைப் பரட்டை காட்சிகளைச்
சொந்தம் என்றே எண்ணாதே!
உருண்டை உலகம்! கண்டுணர்ந்து
உரைத்த பொழுது கேட்டார்யார்?
கருத்தை ஆய்ந்து செயற்பட்டால்
காலம் போற்றும் என்தோழா!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

நல்ல பதிவுகளை நன்றே படைத்திங்கு
வல்ல தழிழை வழங்கு!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

அழகிய சொற்களில் அள்ளிப் படைத்தீா்
பழமாய் இனிக்கும் படைப்பு

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

கவிஞா் சுகுமார் கவிதைகள் இன்பச்
செவிநுகா் தேனெனச் செப்பு!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

வரலாறு வருகின்ற தலைமுறைக்கு வாழ்க்கைப் பாடம்

வரலாறு கண்ட வழிகள்நம் வாழ்வின்
அரண்என எண்ணுக ஆய்ந்து!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

நெஞ்சைக் கவரும் நிலையில் உரைத்துள்ளீா்
கொஞ்சும் தமிழைக் குழைத்து!

22.02.2013

-------------------------------------------------------------------------------------------------

கவிஞா் மாலதி அவா்களுக்கு வாழ்த்துக்கள்!

இனிக்கும் தமிழை இசைக்கின்ற தோழி
கனிபோல் அளித்தாய் கவி!

குன்றின் விளக்காய்க் கொடுத்த வலைச்சரம்
நன்றி நவில்கின்றேன் நான்

22.02.2013

-------------------------------------------------------------------------------------------------