samedi 29 décembre 2012

மீண்டுமோர் ஆசை [பகுதி - 4]




மீண்டுமோர் ஆசை

பள்ளிக் கூடம் செல்லுகையில்
     படித்து முடித்துத் திரும்புகையில்
துள்ளிக் குதிக்கும் மீன்விழியின்
     துாதை அறிய மனமெண்ணி
வள்ளி கோயில் அருகினிலே
     வந்து நிற்பேன்! காந்தவிழிக்
கள்ளி காட்டும் காட்சிகளைக்
     காண மீண்டும் ஓா்ஆசை!

பார்க்கா நிலைபோல் பார்க்கின்ற
     பார்வை வித்தை! என்னன்பைச்
சோ்க்கா நிலைபோல் நடித்திங்குச்
     சோ்த்துத் தைத்த இளந்தையல்!
கோர்க்கா திருந்தால் அழகேது?
     கோவை நுால்கள் பேரின்பம்!
வோ்க்கா திருக்கும்! உளம்வேகும்!
     மீண்டும் காண ஓா்ஆசை!

                        (தொடரும்) 

9 commentaires:

  1. Réponses

    1. வணக்கம்!

      அருமை! அருமை! அருணைா கருத்தே
      பெருமை! பெருமை! எனக்கு!

      Supprimer
  2. ஆசைகளின் அணிவகுப்பு அருந்தமிழில் தொடரட்டும்.
    எனது மின்னஞ்சல் முகவரி
    tnmdharan@yahoo.com
    என் வலைப பூவிற்கு வந்து கருத்திட்டமைக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஆசைகள் பொங்கிவரும்! அந்தமிழ் தந்துவந்த
      ஓசைகள் பொங்கிவரும் ஓது!

      Supprimer
  3. உங்கள் காதல்-
    பெருகட்டும்-
    கவிதை அருவி-
    கொட்டட்டும்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பெருகும் கவியருவி! பீடார் தமிழைப்
      பருகும் கவிக்குருவி பார்!

      Supprimer
  4. தங்கள் கவிதையை மீண்டும் மீண்டும் காண
    எமக்கும் அந்த ஆசை உள்ளதே ஐயா!....வாழ்த்துக்கள்
    மேலும் தொடரட்டும் இனிய ஆசைகளுடன் தங்கள்
    கவிதைகளும் .........

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உனைமீண்டும் மீண்டும் உயா்தமிழ் கவ்வ
      எனைமீண்டும் ஏகும் இனிப்பு!

      Supprimer

  5. வணக்கம்!

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! கவிதை
    அருமைக்குச் செய்தீா் அழகு

    RépondreSupprimer