Affichage des articles dont le libellé est ஓரெழுத்து வெண்பா!. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est ஓரெழுத்து வெண்பா!. Afficher tous les articles

mardi 4 septembre 2018

ஓரெழுத்து வெண்பா!


ஓரெழுத்து வெண்பா!
  
தத்தத்தா! தாத்தத்தா! தத்தாத்தா! தாதா..தா!
தத்தித்தா! தத்தி..தா! தாத்தி..தா! - தித்தித்த
தாதைத்தா! தொத்துத்தா! தோது..தா! தத்தோதித்
துாதைத்தா! தா..தா.. துதி!
  
தத்தத்தா! தாத்தத்தா! தத்தாத்தா! - சந்த வாய்பாடுகள்
தாதா - தந்தை
தத்தி - பாய்ந்து, கொடை
தாத்தி - ஆத்திமரம்
தாதை - பூங்தாது
தொத்து - பழமையான நட்பு
தோது - தொடர்
தத்தோதி - தத்துப்பிள்ளையாக உரைத்து
துாது - செய்தி
துதி - புகழ்
  
என் இறைவானாகிய தந்தையே! தமிழளிக்கும் சந்தங்களைத் தருக! பாய்ந்து தருக. கொடைபோல் தருக. ஆத்திமர அருளைத் தருக. இனிக்கும் பூக்களைத் தருக. உனக்கும் எனக்கும் உள்ள முன்னை உறவைத் தருக. தொடர்பைத் தருக. என்னைத் தத்துப்பிள்ளையாக உரைக்கும் செய்தியைத் தருக. புகழைத் தருக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
04.09.2018