புதியதோர் உலகம் செய்க!
கறுப்பு சிவப்பு நிறவெறியால்
கரைந்த கண்ணீர் பெருங்கடலோ!
மறுப்பு கூற வழியின்றி
வாடும் அடிமை நிலையோனோ?
எறும்பும் எந்தத் தடையினையும்
ஏகிச் செல்லும்! இழிவின்றிச்
சிறக்கும் வண்ணம் புத்துலகைச்
சிந்தை மணக்க அமைத்திடுக!
(தொடரும்)
சிறக்கும் வண்ணம் புத்துலகைச்
RépondreSupprimerசிந்தை மணக்க அமைத்திடுக!
புதியதோர் உலகம் அமைக்க அருமையான சிந்தனைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
Supprimerவணக்கம்!
கருத்திற்குக் கவிஞனின் கனிந்த நன்றிகள்
புதியதோர் உலகம் காணப்
புறப்படும் புலவன் சொற்கள்!
மதியிலோர் கருமைப் புள்ளி
மருவிடா வாழ்வைச் சொல்லும்!
பதிவிலோர் கவிதைக் காடு!
படிப்பவா் நெஞ்சை ஈா்க்கும்!
நதியிலோர் அணையைப் போன்று
நறுந்தமிழ்த் தேனைப் பாய்ச்சும்!
கவிதை அழகு. உலகை சிந்தை மணக்க அமைத்திடுவோம்
RépondreSupprimerஅந்நியன் வருவானா?தண்டனை தருவானா?
Supprimerவணக்கம்!
சிந்தை மணக்கும் புத்துலகில்
சிறுமைக் கென்றும் இடமில்லை!
முந்தை மணக்கும் நனனெறிகள்
மூச்சுக் காற்றில் தினமேறும்!
எந்தை தந்தை தந்தைதம்
ஏற்றம் பாடி நடமாடும்!
விந்தை என்றன் கவியாற்றல்
வெல்லும் கற்றோர் மனத்தினையே!
நன்று ஐயா
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
என்றும் தமிழ்பரவ! எங்கும் தமிழொளிக்க!
நன்றுன் வருகை நலம்!
மிக அருமை ஐயா.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
அருமைத் தமிழை அருந்தி அளித்தீா்
பெருமை பெருகும் பெயா்!
கவிதை அருமை அய்யா. புதியதோர் உலகம் செய்வோம்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கரந்தைச் செயக்குமார் நற்கருத்தைக் கண்டே
உரம்பெறும் என்றன் உளம்!