பாரீசில் புலவா் இராமாநுசனார்
வலைத்தமிழ் உறவுகளே வணக்கம்!
ஐரோப்பியச் சுற்றுலா வந்திருந்த புலவா் இராமானுசனார் அவா்களை நேற்று இரவு அவா் தங்கியிருந்த விடுதியில் கம்பன் கழக உறவுகளுடன் சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்!
புலவா் ஐயாவுடன் பேசிக் களித்த அந்த மணித்துளிகள் நெஞ்சுள் பதிவாகி நின்று மணக்கின்றன! உங்கள் மனங்களிலும் மணந்து மணம் வீசப் புகைப்படங்களைப் பதிவு செய்கிறேன்.
நிலவா் ஆக வலையுலகில்
நின்றே
ஒளிரும் தமிழ்நெஞ்சா்!
புலவா் இராமா நுசனாரைப்
போற்றிப்
புகழ்ந்து மகிழ்ந்திட்டேன்!
குலவும் தமிழின் சீா்காக்கும்
கொள்கை
மறவா் சந்திப்பு
மலரும் நினைவாய் எந்நாளும்
மணக்கும்!
இனிக்கும்! மாண்புடனே!
06.08.2013