dimanche 30 décembre 2012

மீண்டுமோர் ஆசை [பகுதி - 5]




மீண்டுமோர் ஆசை

வண்ணத் தோகை அசைந்தாடும்!
     சின்ன மீன்கள் சிரித்தாடும்!
எண்ணக் தோகை விரித்தாடும்!
     இளமை உயிரைப் பறித்தாடும்!
பண்ணப் பண்ணச் சிலிப்பூட்டும்
     பாங்காய்ப் பார்வை படா்ந்தாடும்!
உண்ண உண்ணப் பசிபெருகும்
     ஒண்கண் பார்க்க மீண்டும்ஆசை!

காதல் கணையை வீசுகிற
     கண்கள் கவிதைக் கருவூலம்!
மோதல் புரிந்து விழிநான்கும்
     முழுகும் சொர்க்கக் கடல்ஆழம்!
ஈதல் இனிமை! அவள்பார்வை
     இன்பப் பெருக்கின் கலைக்கூடம்!
சாதல் வரும்முன் அவள்விழியைச்
     சற்றே பார்க்க ஓா்ஆசை!

(தொடரும்)

7 commentaires:

  1. கவிதையை படிக்கும் போது எங்களின் பழைய நினைவுகள் நினைவுக்கு வருகிறது.அருமை அருமை. அப்துல் தயுப்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கவிதையின் வெற்றி! கவிஞன் எனக்குப்
      புவியை அளித்தீா் புகழ்ந்து!

      Supprimer
  2. Réponses

    1. வணக்கம்!

      ஆகா எனவாய் அமுதைச் சுரந்திட
      ஓகோ எனச்சொல்! உவந்து!

      Supprimer
  3. காதல் இரசம் சொட்டும் கவிகை-நல்
    நாதம் இசைக்கும் ஒன்று !

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காதல் சுவையில் களித்தாடி நற்கருத்தை
      ஈதல் புரிந்தீா் இனித்து

      Supprimer

  4. வணக்கம்!

    அன்புடன் வந்து கருத்தளித்தீா்! என்வணக்கம்
    இன்புடன் நன்றி இசைத்து!

    RépondreSupprimer