Affichage des articles dont le libellé est காலை வணக்கம். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est காலை வணக்கம். Afficher tous les articles

dimanche 11 mars 2018

இனிய காலை வணக்கம்!



இனிய காலை வணக்கம்!

திருவள்ளுவர் ஆண்டு 2049 ஞாயிற்றுக் கிழமை மாசி 28
11.03.2018

ஆழ்ந்த நெறியளிக்கும் அந்தமிழே! எந்நாளும்
சூழ்ந்த புகழளிக்கும் தொல்தமிழே! - வீழ்ந்திடச்
செய்யும் பகையடக்கச் செங்களம் செல்கின்றேன்!
உய்யும் திறம்தந்[து] உதவு!

பள்ளித் தலத்திலும் பாடும் களத்திலும்
துள்ளி எனக்குள் துடிப்பவளே! - தெள்ளமுதே!
பொல்லாப் பகைவரைப் போக்கிடச் செல்கின்றேன்!
எல்லாம் அளித்தெனை ஏந்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

mardi 27 février 2018

காலை வணக்கம்!



இனிய காலை வணக்கம்!
  
முல்லை மலர்க்காடே! முந்து சுவைக்கவியே!
கொல்லை வளமே! குளிர்தமிழே! - எல்லையிலா
முன்னே உதித்தவளே! முத்தமிழே! நற்றமிழே!
என்னே..உன் தோற்ற எழில்!
  
செவ்வந்திப் பூவே! செழுந்தேனே! சிந்தையுள்
சிவ்வென்று மேவும் சிலுசிலுப்பே! - கவ்வென்[று]
உயிரைக் கவர்கின்ற ஒள்ளழகே! என்றும்
உயர்வைத் தருவாய் உவந்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
27.02.2018

lundi 26 février 2018

காலை வணக்கம்!



இனிய காலை வணக்கம்!
  
வாய்மை மொழியே! வளமுடைய பன்மொழிக்குத்
தாய்மை மொழியே! தவமொழியே! - துாய்மை
அளிக்கும் மொழியே! அருளேந்தி வா..வா..
களிக்கும் மொழியே கமழ்ந்து!
  
சீர்மணக்கும் செந்தமிழே! தார்மணக்கும் தண்டமிழே!
பார்மணக்கும் பைந்தமிழே! பண்டமிழே! - ஏர்மணக்கும்..
ஊர்மணக்கும்! ஒண்டமிழே! தேர்மணக்கும் பாக்களை
வேர்மணக்கும் வண்ணம் விளம்பு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
26.02.2018

samedi 24 février 2018

இனிய காலை வணக்கம்!

இனிய காலை வணக்கம்!
  
அப்பா அளித்த அறமொழியே! ஆருயிரே!
இப்பார் வணங்கும் எழில்தமிழே! - எப்பொழுதும்
பாடும் வரமளிப்பாய்! பண்பளிப்பாய்! நற்புகழை
நாடும் மனமளிப்பாய் நன்கு!
  
அம்மா அளித்த அருளமுதே! என்மனத்துள்
செம்மாந் திருக்கும் செழுந்தமிழே! - இம்மா
நிலத்தில் தமிழினத்தார் நீதிநெறி காக்கும்
வளத்தில் இருந்திடவே வாழ்த்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
24.02.2018