ஏக்கம் நுாறு [பகுதி - 18]
முத்தமொன்று நான்கேட்டு முன்னே நிற்க
முல்லையவள்
பின்னோக்கி நகா்ந்து நின்றாள்!
சத்தமொன்றும் இல்லையடி! சற்றே வாராய்!
சத்தியமாய்த்
தீங்கேதும் செய்ய மாட்டேன்!
சுத்தமென்று சொல்வதுபோல் சும்மா நீயும்
துாண்டியெனை
வாட்டாதே! அன்பே பொல்லாக்
குத்தமொன்றும் இல்லையடி! இளமைக்
கென்றும்
குளிர்காலம்
தொலை்லையடி! அழகே வாராய்! 78
அருமை...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
த.ம.1
Supprimerவணக்கம்!
பட்டாம் பூச்சி தேனருந்தும்
படத்துக் கேற்ற கவிதையினைத்
தொட்டால் போதும் இன்பமழை
கொட்டோ என்று கொட்டிடுமே!
சிட்டாய்ப் பறந்து சிறப்பெழுதும்
சீரார் நண்பா் தனபாலா்
மீட்டாய் போன்ற சுவைமனத்தா்!
மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன்
எல்லா கவியும் எனக்கு எழுச்சியும் ஊக்கமும் ஏக்கமும் தருதே
RépondreSupprimer