Affichage des articles dont le libellé est சிந்து. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est சிந்து. Afficher tous les articles

dimanche 31 janvier 2021

ஒயிற்கும்மி முடுகியல்

 ஒயிற்கும்மி [முடுகியல் பெற்றது]

 

1.

தண்டைகு லுங்கிட வந்தவ ளாம் - இன்பத்

தண்டமிழ் ஓங்கிடத் தந்தவ ளாம்oo

சந்தந்தர முந்துந்தமிழ் எங்கும்புகழ் தங்குங்கலை

சாற்றிட மன்மதன் காப்பாமே ooo! 

 

2.

பூவாக மெல்லடி உற்றவ ளாம் - மாயப்

புன்னகை வீசிடக் கற்றவ ளாம்oo

பூத்துக்கொடி தோப்புக்கனி கோத்துக்கவி மூத்துத்திகழ்

பொற்பினை வாழ்வினில் பெற்றவ ளாம்oo

 

3.

மெட்டியின் இன்னிசை மீட்டிடு வாள் -  பஞ்சு

மெத்தைமேல் இன்பத்தைத் தீட்டிடு வாள்oo

வித்தைத்தரு முத்தக்கலை கற்றுத்தர எச்சிற்சுவை

விஞ்சிட மோகத்தை  மூட்டிடு வாளoo!

 

4.

தாமரை பாதங்கள் மின்னிடு மே - அவை

தாம்செலும் மண்மீது பொன்னிடு மேoo

தகையேமிகு தமிழேயவள்! தலையேமிகு குணமேயவள்!

தண்விழி பூமாலை பின்னிடு மேoo

 

5

அன்னங்கள் கண்டுளம் ஏங்கின வே - அவள்

ஆடுந டங்கண்டு வீங்கின வேoo

அணியேயென அமுதேயென அறிவேயென அழகேயென

அன்பினில் சொக்கியே துாங்கின வேoo

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

31.01.2021

எதுகை ஓரடிக் கும்மி

 எதுகைத்தொடையால் வந்த ஓரடி கும்மி

 

தந்தன தந்தன தானன - என்று

சந்தமே சிந்திடக் கும்மிய டிoo

 

வண்ணமும் சிந்துவும் துள்ளிவ ரும் - ஓங்கும் 

எண்ணமும்  வாழ்கையும் கும்மிய டிoo

 

காய்மொழி நீங்கிட வேண்டும டி - நம்மின்

தாய்மொழி ஓங்கிட கும்மிய டிoo

 

மண்மணம் வீசிடும் வண்டமி ழே - பாடிப்

பண்மணம் மேவிடும் கும்மிய டிoo

 

காய்கனிச் சீர்கொண்ட முன்மொழி யாம் - தினம்

தாய்பணி ஆற்றியே கும்மிய டிoo

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

30.01.2021