Affichage des articles dont le libellé est விருத்த. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est விருத்த. Afficher tous les articles

samedi 20 août 2022

கலிருத்தம் - 9

 


விருத்த மேடை - 73

 

கலிவிருத்தம்  - 9

 

[மாங்கனி + கூவிளம் + கூவிளம் + தேமா]

அல்லது

[மாங்கனி + கூவிளம் + தேமா + புளிமா]

[நேரசை 12 எழுத்துகள், நிரையசை 13 எழுத்துகள்]

 

மத்தச்சின மால்களி றென்ன மலைத்தார்!

பத்துத்திசை யும்செவி டெய்தின பல்கால்

தத்தித்தழு வித்திரள் தோள்கொடு தள்ளித்

குத்தித்தனிக் குத்தென மார்பு கொடுத்தார்!

 

[கம்பர், யுத்த. அதிகாயன் வதை - 244]

 

ஆடித்தொழு ஈசனை! அன்புடன் நாளும்

பாடித்தொழு ஈசனைப் பற்றுடன் போற்றிக்

கூடித்தொழு ஈசனைத் துாய மனத்துள்

சூடித்தொழு ஈசனைத் தொல்வினை நீங்கும்!

 

[பாட்டரசர், 18.06.2022]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

இவ்வகை கலிவிருத்தம் ஒன்று விரும்பிய பொருளில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
20.08.2022