vendredi 21 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 5]




புதியதோர் உலகம் செய்க

தோட்டி பறையன் குறவனென
    வாட்டி வதைத்தல் பெருங்கொடுமை!
போட்டி போட்டு மதப்பேயைப்
    போற்றிக் களித்தல் துயா்மடமை!
ஈட்டி கூா்மைச் சொல்லேந்தி
    இருளை நீக்கு! வாழ்வினிமை!
ஆட்டி அசைக்கும் திருவரங்கா
    அறிவின் உலகை அமைத்திடுக!

(தொடரும்)

11 commentaires:

  1. நச்சுன்னு நாலு வரி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நச்சென்று சொன்னாலும் நரியின் மூளை
      நயவஞ்ச நிலைவிடுமோ? காய்ந்தே உள்ள
      குச்சொன்றை உடைப்பதுபோல் நம்மின் வாழ்வைக்
      குறிவைத்து முறித்திடுவார்! இலக்க ணத்தில்
      இச்சொன்று வருமென்றே எடுத்துச் சொன்னால்
      இல்லையெனில் குறையென்ன நேரும் என்பார்!
      அச்சொன்றை அடித்ததுபோல் திருத்தம் இன்றி
      ஆடுகளாய் மாடுகளாய் வாழ்தல் வாழ்வா?

      Supprimer
  2. நல்லதோர் உலகமைய நற்கவிதை பாடுகின்றீர்.
    வல்லதோர் இறையவனின் நல்லருளை நாடுகின்றீர்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்லதோர் உலகைப் பாட
      நட்புடன் கருத்தும் ஈந்தீா்!
      வல்லதோர் வரமாய் ஏற்று
      மகிழ்ந்துநான் நன்றி சொன்னேன்!
      வெல்லவோர் ஆற்றல் நல்க
      விரும்பியே நாளும் வாரீா்!
      மெல்லவோர் விருத்தம் தன்னில்
      விஞ்சிடும் அன்பை வைத்தேன்

      Supprimer
  3. // ஆட்டி அசைக்கும் திருவரங்கா
    அறிவின் உலகை அமைத்திடுக!//

    தீட்டியக் கவிதைத் தேனாகும்
    தெள்ளுத் தமிழின் பாவாகும்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தீட்டிய கவிதை கண்டு
      ஊட்டிய கருத்தும் நன்று!
      வாட்டிய கொடுமை நீங்க
      வல்லவன் அருள வேண்டும்!
      காட்டிய விருத்தம் யாவும்
      கவிஞன்என் ஆசை என்பேன்!
      ஈட்டிய செல்வம் யாவும்
      இன்றமிழ்ச் செல்வத்(து) ஈடோ?

      Supprimer
  4. வணக்கம் ஐயா அருமையான துதி !...அறிவும் அன்பும்
    நிறைந்த உலகை அந்த இறைவன் நிட்சயமாக எமக்கு அருளல் வேண்டும் .
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அறிவும் கனிந்தசுவை அன்பும் அமைந்தால்
      உறவால் உயரும் உலகு!

      Supprimer
  5. சிறப்பான வரிகள், தொடருங்கள் ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      செம்மலை தந்த சிறிய கருத்திங்கு
      நம்நிலை காட்டும் நயந்து

      Supprimer
  6. வாட்டி வதைத்தல் ஆசையல்ல
    ஊட்டி விட்டார் அக்காலம்.
    போட்டி போடும் அறிவுயர்ந்து
    ஊட்டிவிடட்டும் புதுக் கருத்தை.
    கூட்டித் தள்ளட்டும் பேதமையை.
    வாட்டும் பேதம் மறைந்துவிடும்.

    அரிய வரிகள்.
    இறையளாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer