mercredi 19 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 3]




புதியதோர் உலகைச் செய்க!

ஒன்றே இறைவன்! பலவல்ல!
    உள்ளம் கோயில்! உணா்ந்திடுக!
அன்றே இருந்த அருந்தமிழை
    அகில மொழியாய் ஆக்கிடுக!
மன்றே மணக்கும் மதியுரையில்
    மனமே மணக்கும் மாண்புரையில்
நன்றே நடக்கும் புத்துலகை
    நற்றேன் நாதா அமைத்திடுக!

(தொடரும்) 

10 commentaires:

  1. சுருங்க சொல்லி விளக்கி விட்டீர்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      கவியாழி தந்த கருத்துக்கற் கண்டு!
      புவியாழி நெஞ்சரைப் போற்று

      Supprimer
  2. உண்மைதான் அய்யா...!

    நல்ல அழகா சொல்றீங்க...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சீனியின் சொற்களைச் சீரார் கவிஞன்யான்
      தீனியாய் உண்பேன் தினம்!

      Supprimer
  3. புதியதோர் உலகைச் செய்க!-நாளும்
    பொன்னெனக் கவிதை தருக
    முதியவன் வாழ்த்து நானும் -இங்கே
    மொழிந்திட,நன்றி வாழ்க!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புலவா் பொழிந்த புகழுரையால் என்றன்
      புலமை பெருகும் பொலிந்து

      Supprimer
  4. வணக்கம்! தங்கள் வலைப் பதிவின் வலதுபக்கம் தமிழடிப் பொடியான் மற்றும் பார்வைகள் என்பதன் கீழ் உள்ள விவரங்களைப் பார்வையிட இயலவில்லை. கவனிக்கவும். மேலும் “கவிஞா் கி. பாரதிதாசன்” என்பதில் கவிஞர் என்று மாற்றவும். உங்கள் பதிவுகளில் “ர்” சரியாக வரவில்லை. NHM Writer இன் Phonetic Unicode ஐ செயல்படுத்தி பார்க்கவும். (சுட்டிகாட்டியதில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.)

    RépondreSupprimer
    Réponses

    1. ஐயா வணக்கம்!

      கணிப்பொறியைக் குறித்தும், மின்வலையைக் குறித்தும், இயக்குதலைக் குறித்தும் நான் இன்னும் தெளிவாக அறிந்துகொள்ளவில்லை. நண்பா்களிடம் ஒன்றொன்றாகக் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். தங்கள் குறிப்பிட்ட குறைகளை விரைவில் சரிசெய்ய முயற்சி செய்கிறேன்.

      குறைகளைக் கண்டு முறையுடன் சொன்னீா்!
      நிறைகளைப் பெற்றுநான் நிற்க! - மறையாய்
      வணங்கி மகிழ்கின்றேன்! வல்ல கருத்துக்(கு)
      இணங்கி மகிழ்கின்றேன் ஈா்த்து!

      Supprimer
  5. புத்துலகு அமைக்க நாதன்
    சத்து தரட்டும்! தரட்டும்!
    உத்தமமாய் மக்கள் மகிழ
    எத்துணை சிறப்பு வழி!
    முத்தாக அமைக!அமைக!

    நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer