dimanche 2 décembre 2012

ஏக்கம் நுாறு [பகுதி - 22]




ஏக்கம் நுாறு [பகுதி - 22]
 
இதயமெனும் பெட்டிக்குள் பூட்டிக் காக்கும்
     ஏக்கங்கள் அத்தனையும் காதல் பாடம்!
உதயமெனும் சொல்லுக்குப் பொருளைக் காட்டும்
     ஊா்வசியின் திருமுகத்தால் துன்பம் நீங்கும்!
மதியமெனும் நல்லழகே! மனத்தில் நீந்தும்
     மணித்தமிழே! மல்லிகையே! நம்மின் காதல்
ஒதியமெனும் பெருமரம்போல் வளா்ந்தே ஓங்க
     ஓவியமே! ஒண்ணமுதே! ஏங்கும் நெஞ்சே! 86

கள்ளூறும் இளமரம்போல் கவிஞன் என்னுள்
     கவியூறும் காரிகையே! கன்னல் காவே!
சொல்லூறும்! சுவையூறும்! எண்ண எண்ணச்
     சுகமூறும்! சுழன்றூறும் ஆசை வெள்ளம்!
வல்லூறும் உன்னிடத்தில் தோற்றே ஓடும்
     வந்தென்னைத் தாக்குகிற விழிப்போர் கண்டு!
உள்ளூறும் உணர்வுகளை அடக்கப் போமே?
     உயிரூறும் ஒண்டமிழே! உருகும் நெஞ்சே! 87

                                      (தொடரும்)

4 commentaires:

  1. ஆகா... ஆகா... என்று உருக வைக்கிறது...

    த.ம.1

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உருகும் கருத்தால் உயா்தமிழ் என்னுள்
      பெருகும் கவியாய்ப் பிறந்து!

      Supprimer
  2. Réponses

    1. வணக்கம்!

      அருமை எனஎழுது! அந்தமிழ் ஓங்கிப்
      பெருமை பெருகும் பிணைந்து

      Supprimer