இன்பமே! எந்நாளும் துன்பமில்லை!
கனியாகும் தமிழ்மொழிஇங் கிருக்கும் போது
காயாகும் அயல்மொழியில் கவர்ச்சி ஏனோ?
இனியேனும் தாய்மொழியை வளர்க்கும் தொண்டில்
ஈடுபடல் கடமைகளில் முதலாய்க் கொள்வோம்!
தனியாகத் தமிழரெலாம் தொண்டு செய்தால்
தலைவர்என வாழ்ந்திடலாம்! தமிழ்வா ழாது!
இனியதமிழ் நெஞ்சங்கள் ஒன்று சேர்ந்தால்
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை!
தெளிதமிழ் இதழ் 03.03.1996
தமிழினத்தின் விடிவு
சாதியினால் வந்திடுமோ உயர்வு? நாளும்
சலிக்காமல் உழைப்பதனால் ஓங்கும் வாழ்வு!
நீதியினால் உலகெங்கும் பூக்கும் இன்பம்!
நீடுகுறள் வழிநின்றால் வருமோ துன்பம்?
பாதியிலே இல்லறத்தை விட்ட கன்று
பக்தியிலே முழுகுவதா துறவு! நாட்டில்
வீதியிலே போராடும் மறவர் தம்மின்
வெற்றியிலே தமிழினத்தின் விடிவு தோழா!
சன்மார்க்கம் இதழ் 24.05.2000
இரண்டுமே நல்ல கருத்துக்கள் அடங்கிய வரிகள்...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
த.ம.1
இரண்டும், அருமையான கருத்துகள்...
RépondreSupprimerரசித்தேன்,
RépondreSupprimerருசித்து உள் வாங்கினேன்..ஆசிரியரே!
வேதா. இலங்காதிலகம்.