samedi 10 novembre 2012

கம்பனைப் போற்றுவீா்




கம்பனைப் போற்றுவீர்!

எடுப்பு

கம்பனைப் போற்றுவீர் கன்னியரே! - கவி
கம்பனைப் போற்றுவீர் காளையரே! - தமிழ்க்...
                                    (கம்பனை)

தொடுப்பு

செம்மலாய்த் திகழ்ந்தவன் இராமபிரான்! - அவன்
சீரினைச் செப்பினான் புலவர்பிரான்! - தமிழ்க்...
                                    (கம்பனை)

முடிப்பு

கற்பனை கொஞ்சிடக் கருத்தினைக் கொடுத்தான்!
கவிநயம் விஞ்சிடக் காவியம் தொடுத்தான்!
சொற்சுவை மிஞ்சிடச் சுடர்கவி வடித்தான்!
சுரர்களும் அஞ்சிடத் தொடர்பணி முடித்தான்! - அந்தக்
                                    (கம்பனை)

இராமனின் மாட்சியே பெருமையாம் என்றான்!
இராவணன் வீழ்ச்சியே சிறுமையாம் என்றான்!
பாரத ஆட்சியே அருமையாம் என்றான்!
பாரினில் பொதுமையே உரிமையாம் என்றான்! - அந்தக்
                                    (கம்பனை)

5 commentaires:

  1. ஆம் கம்பனைப் போற்றுவோம்....... ஐயா

    RépondreSupprimer
  2. கம்பனின் கவி நயத்தை விண்டு உரைத்திட்ட அழகு தமிழ்க் கவிதையால் அளவற்ற களிப்படைந்தேன். கம்பனுக்கிணை எவர் சொல்லுங்கள். மிக ரசித்தேன் ஐயா. நன்று.

    RépondreSupprimer
  3. அருமை வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...
    த.ம.2

    RépondreSupprimer
  4. கவிச்சக்கரவர்த்திக்கு ஓர் அழகிய கவி படைத்தீர்கள் ஐயா ...

    RépondreSupprimer
  5. உண்மையான பாரதிதாசனின் புகழ் பாடிய அன்ணாவின் கம்பரசம் படியுங்கள் அய்யா.

    RépondreSupprimer