lundi 22 octobre 2012

வ.உ.சி




கப்பலோட்டிய தமிழர்
..சிதம்பரனார் 

படித்தவர்கள் பரங்கியர்தம் கால்கள் நாடிப்
            பதவிபெறும் அந்நாளில், நாட்டைக் காக்கத்
துடித்தவர்கள் அணியினிலே முன்னே நின்று
            துறந்திட்டார் பதவியினை! நன்றாய்க் கொள்ளை
அடித்தவர்கள் அகன்றிடவே கப்பல் ஓட்டி
            அஞ்சாத வேங்கையென நின்றார்! கண்ணீர்
வடித்தவர்கள் வாழ்வுயர நிலவாய் இங்கு
            வந்துதித்த ..சி புகழைப் போற்று!

கொழித்தஅயல் நாட்டினரை ஓட்ட, ஆடை
            கொளுத்தும்போர் படைத்திட்டார்! உரிமைச் சங்கை
அழித்தகொடும் தீயவரைப் போக்கச், செல்வம்
            அத்தனையும் இழந்திட்டார்! நாட்டுக் காகச்
செழித்தபுகழ் மேன்மையினை ஈந்து, கூண்டில்
            செக்கிழுத்துத் துயருற்றார்! முதுமை ஏய்திக்
கழித்ததுயர் வாழ்வோடு தமிழை ஆய்ந்து
            கனல்கொடுத்த ..சி புகழைப் போற்று!

8 commentaires:

  1. இவரைப் பற்றிய கேள்விஞானம் சிறிதுண்டு
    நல்ல கவிதை

    RépondreSupprimer
  2. கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவினைப் போற்றுவோம் அய்யா. நன்றி

    RépondreSupprimer
  3. உற்சாகமூட்டும் வீரமிகு வரிகள்...

    நன்றி ஐயா...

    த.ம.2

    RépondreSupprimer
  4. ஆஹா கப்பலோட்டிய தமிழரின் பகிர்வுக்கு நன்றி

    RépondreSupprimer
  5. தித்திக்கும் கவிதனை தினமும் எழுதி
    தீந்தமிழை வளர்கின்ற பாரதி தாச
    எத்திக்கும் பரவிடவே வலையின் வழியில்
    எண்ணற்றோர் கண்டிடவும் தமது விழியில்
    முத்துக்கும் மேலன்றோ தமிழாம் என்னை
    மூத்தவளாய் முத்தமிழாய் வாழ்தல் அன்னை
    வித்துக்கு நீராக விளங்கும் நீரே
    வியனுலகும் வாழ்த்துமே உமது பேரே

    RépondreSupprimer
  6. கப்பலோட்டிய தமிழருக்கு அற்புதமான கவிமாலை நன்றி ஐயா.

    RépondreSupprimer
  7. மறக்கடிக்கப்பட்ட தலைவரை பற்றிய தங்களின் பதிவு கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது, அருமையான கவிதை.அப்துல் தையுப்,La courneuve.

    RépondreSupprimer
  8. கம்பன் கவி வண்ணமோ!

    தமிழ் மறையின் சொல் வண்ணமோ!

    கப்பலோட்டிய தமிழன் புகழ்ப் பாடும் - உன் எண்ணமோ....
    மனம் கமழும்!
    புகழ் பரப்பும் - தாய்மொழி!

    என்றும்
    நின் தமிழ் வாழ்க!

    என்றும் மலரட்டும்
    நின் தமிழ்ப்புலமை !

    RépondreSupprimer