vendredi 7 septembre 2012

மொழிபேண வேண்டும்


மொழிபேண வேண்டும்   


எடுப்பு

கண்போல மொழிபேண வேண்டும் - நாளும்
கனிவோடு தமிழ்ப்பாலை இனிதுண்ண வேண்டும்!
                                (கண்)  
தொடுப்பு   

மண்மீதில் உயர்வாகும் தமிழே - அதை
மதியாமல் இகழ்வோரின் முகமீதில் உமிழே!
                                 (கண்)
முடிப்புக்கள்

தமிழ்வாழ நாம்வாழ்வம் அன்றோ - தறு
தலையோர்கள் இதைஏனோ புரியார்கள் இன்றே!
அமிழ்தான தமிழ்தன்னை அறியார் - அன்பை
அயலான மொழிமீது கொள்வார்கள் சிறியார்!
                                 (கண்)

கரும்பான மொழியாகும் தமிழே! - அதைக்
கற்காமல் விட்டாலே காணுவோம் இகழே!
விரும்பாத நம்மோரை விரட்டு! - அந்த
வீணர்கள் செய்குவார் மேடையில் புரட்டு!
                                 (கண்)

அரும்பான மழலைக்கும் ஊட்டு! - தமிழ்
அருந்தாத பிள்ளைக்கும் அமிழ்தென்று காட்டு!
இரும்பான நெஞ்சமும் உருகும்! - தமிழ்
இசைகேட்க இசைகேட்க இன்பமே பெருகும்!
                                 (கண்)

தீண்டாமை என்கின்ற பேயை - இங்குத்
தீணடாதே எந்நாளும் இதுஒரு மாயை!
பூண்டோடு கையூட்டை ஒழிப்பாய் - நாளும்
புகழ்மிகும் தெளிதமிழ் கற்றுமே செழிப்பாய்!
                                  (கண்)

2 commentaires:

  1. மொழிபேண வேண்டும்! முதுதமிழ் ஓங்கும்
    வழிபேண வேண்டும்! வளரும் - அழகாய்ப்
    பொழிற்பேண வேண்டும் புலமையுள்! உன்போல்
    எழிற்பேண வேண்டும் எனக்கு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      விழிபோல் மொழியை விரும்பிடுக! இல்லை
      பழிமேல் படிந்துபாழ் ஆகும்! - கழிவுகளை
      நாடிக் சுவைப்பாரோ? நல்ல தமிழ்மறந்தே
      ஓடி அலைவாரோ ஓது?

      Supprimer