நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்
வணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப்
பொங்கல் திருநாளே!
எங்கும் அளிப்பாய்
இசைத்து!
14.01.2013
-----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
பாட்டும் படமும் படைத்தசுவை நெஞ்சத்துள்
கூட்டும் தமிழைக் குவித்து!
பாட்டும் படமும் படைத்தசுவை நெஞ்சத்துள்
கூட்டும் தமிழைக் குவித்து!
14.01.2013
-----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
ஏக்கப் பொங்கல் சமைத்தனையே!
என்றன் கண்கள் அழுதனவே!
தாக்கும் கொடிய தடையுடைத்துத்
தமிழைத் தாங்கி உயா்ந்திடுவோம்!
ஊக்கப் பொங்கல்! தமிழ்ஒன்றே!
உண்மைப் பொங்கல் தமிழ்ஈழம்!
போக்கும் பொங்கல் போகியிலே
போடு துன்பம் எரியட்டும்!

திங்கள் ஒளியும்!
செழும்வயலும்
தேவன்
தந்த பெருங்கொடையே!
எங்கள் வாழ்வும்
உயா்வளமும்
இன்பத்
தமிழின் அருங்கொடையே!
உங்கள் பணிகள்
சிறக்கட்டும்!
உலகப்
புகழிற் திளைக்கட்டும்!
பொங்கல் திருநாள்
பொங்குகவே!
பூந்தேன்
இனிமை தங்குகவே!
14.01.2013
-----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
ஏா்பிடிக்கும் கைகளையே
எண்ணிப் பார்த்தே
எழுதிவைத்த
கவிபடித்தே இன்பம் கொண்டேன்!
கூா்பிடிக்கும் நுண்மையென
ஆக்கம் செய்தால்
குளிர்பிடிக்கும்
நெஞ்சுக்குள் சூட்டை ஏற்றும்!
சீா்பிடிக்கும் சிந்தனைகள்!
கொள்கை வன்மை!
சீழ்பிடிக்கும்
உலகுக்கு மருந்தை
ஏவும்!
தோ்பிடிக்கும் திருநாளின்
மகிழ்வைப் போன்றே
தேன்வடிக்கும்
இளமதியார் காலம்
வெல்க!
15.01.2013
-----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
சுத்தம் சுகத்தைத்
தருமென்ற
துாய
மொழியை எண்ணுகிறேன்!
பித்தம் போக்கும்
நன்மருந்தைப்
பிணைக்கும்
பதிவைத் தொடருகவே!
சத்தம் போட்டுக்
கொண்டாடும்
சல்லிக்
கட்டு! தமிழ்வீரம்!
சித்தம் யாவும்
தமிழ்சூடிச்
சிறந்து
வாழ்க பல்லாண்டே!
15.01.2013
-----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
நேரிசை வெண்பா!
காவேரி நீா்எண்ணிக் கந்தக மண்ணெண்ணிப்
பா..வாரிப் தந்தவுயா் பாவலனே! - பூ..வாரித்
துாவுகிறேன் உன்கவிக்கு! வல்ல துணிவேந்தி
ஏவுகிறேன் என்றன் இடம்!
15.01.2013
-----------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
ஒவ்வொரு நாளும் உயா்தமிழைத் தேடிவரும்
செவ்விய நண்பா முரளி! தெளிதமிழை
இட்டுச் சிறந்தாய்! இருநுாற்றை இன்று..நீ
தொட்டுச் சிறந்தாய் தொடா்ந்து
15.01.2013
-----------------------------------------------------------------------------------------------
மீண்டும் வணக்கம்!
மூங்கிற் காற்றின் இனிமையினை
முரளி தரனே இசைத்திடுக!
ஏங்கித் தவிக்கும் காதலென
எழுத்தை எழிலாய்ப் படைத்திடுக!
தாங்கி நிற்கும் விழுதாகத்
தமிழைத் தரித்துக் தழைத்திடுக!
ஓங்கி அளந்த திருவடியான்
ஒப்பில் புகழை அருளுகவே!

அலையன்று! பொங்கும்
சுனாமி! அழகுக்
கலையென்று போற்றக்
கமழும் - வலைப்பூவை
விச்சு வடித்துள்ளார்!
வெல்லும் தமிழ்சுவைத்து
உச்சி குளிர்ந்தேன்
உவந்து!
15.01.2013
-----------------------------------------------------------------------------------------------
15.01.2013
-----------------------------------------------------------------------------------------------
வணக்கம்
என்வலைக்கு வந்தே எழுதிய பின்னுாட்டம்
என்வலைக்கு வந்தே எழுதிய பின்னுாட்டம்
இன்சுவைக்கு ஈடாய்
இனிப்பென்பேன்! - மின்னும்
இளமதி வந்தே
எழுத்தொளி ஊட்ட
உளம்மகிந் தாடும்

தொடரும்