vendredi 30 juillet 2021

வெண்பா மேடை 208

 


நுாறு ஈற்றடிகள்

 

1.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

தொட்டழகு காண்போம் தொடர்ந்து!


2.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

பட்டழகுப் பாக்களைப் பாடு!


3.
கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

மொட்டழகு கொண்டதுன் மூக்கு!

 

4.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

சிட்டழகு காட்டும் செயல்!

 

5.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

எட்டழகு காட்டும் இடுப்பு!

 

6.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

ஒட்டழகு காட்டும் உடல்!

 

7.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

கொட்டழகுக் கும்மியைக் கூறு!

 

8.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

சொட்ழகுத் தேனைச் சுவை!

 

9.
கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

நெட்டழகு காணுமென் நெஞ்சு!

 

10.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

பொட்டழகு பூத்த பொழில்!

 

11.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

விட்டுப் பிரிந்தாய் விரைந்து!

 

12.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

வட்ட நிலவே..நீ வா!

 

13.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

கட்டுக் கரும்புன் கவி!

 

14.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

கொட்டும் மழையுன் குணம்!

 

15.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

பட்டம் பெறுவேன் படித்து!

 

16.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

பட்டம் பறக்குதே பார்!

 

17.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

சட்டம் இனியில்லை தாண்டு!

 

18.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

கட்டித் தழுவும் கனவு!

 

19.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

கொட்டகை இன்பக் கொடை!

 

20.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

அட்டைபோல் என்னை அருந்து!

 

21.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

வெட்டழகு செய்யும் விழி!

 

22.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

வெட்கம் இனி..ஏன் விடு!

 

23.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

கட்சி வளர்த்தல் கடன்!

 

24

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

வெட்சி அணிந்தேன் விரைந்து!

 

25.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

கொட்டில் அருகே கொடு!

 

26.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

பெட்டிப் புதையலே! பேசு!

 

27.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

கட்டித் தயிருன் கதை!

 

28.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

ஒட்டி யளிப்பாய் உறவு!

 

29.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

எட்டி..நீ போவதேன் இன்று?

 

30.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

குட்டிக் கதைகளைக் கூறு!

 

31.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

வெட்டி மடமையை வீசு!

32.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

கட்டிப் பிடிப்பாய் களித்து!

 

33.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

கட்டிக் கொடுப்பாய் கவி!

 

34.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

அட்டிகை ஆகா அழகு!

 

35.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

சிட்டிக்கை யிட்டே சிரி!

 

36.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

கெட்டிமே ளம்தான் கிளம்பு!

 

37.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

சுட்டித் தனத்தைச் சுருட்டு!

 

38.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

தட்டிக் கொடுப்பாய் தமிழ்!

 

39.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

சுட்டி யுரைப்பாய் சுகம்!

 

40.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

செட்டிக் கடையருகே சேர்!

 

41.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

சொட்டுதே செந்தேன் சுரந்து!

 

42.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

தட்டித் தமிழிசை தா!

 

43.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

திட்டம் இடுவோம் தினம்!

 

44.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

திட்டி வெறுக்காமல் தீண்டு!

 

45.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

தொட்டிநீர் பாயுதடி சொக்கு!

 

46.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

தட்டி விழுமெனைத் தாங்கு!

 

47.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

நட்டுவம் காட்டும் நடை!

 

48.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

நட்பைப் பொழிவாய் நயந்து!

 

49.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

நட்சத் திரமே! நட!

 

50.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

நட்டம் வருமோ நமக்கு?

 

51.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

நட்டு வளர்ப்பாய் நலம்!

 

52.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

நெட்டுரு ஆகும் நினைவு!

 

53.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

நெட்டிசை மீட்டுவாய் நீ!

 

54.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

நெட்டோடை நெஞ்சத்துள் நீந்து!

 

55.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

நொட்டைச்சொல்  நீக்கியே நோக்கு!

 

56.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

கொட்டிச் சுகத்தைக் குவி!

 

57.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

சுட்டி வழியினைச் சொல்!

 

58.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

வெட்டிப் புதைப்போம் விதி

 

59.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

வெட்டிக் கதையேன் விடு!

 

60.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

இட்டார் நெறியை எழுது!

 

61.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

ஒட்டார் செயலை ஒடுக்கு!

 

62.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

பட்டி அவையேறிப் பாடு!

 

63.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

வட்டியுடன் முத்தம் வழங்கு!

 

64.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

பெட்டி மணிகள்..உன் பேச்சு!

 

65.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

முட்டியெனைத் தள்ளும் மொழி!

 

66.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

முட்டியெனைக் கொல்லும் முகம்!

 

67.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

முட்டியெனைத் தாக்கும் முழி!

 

68.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

முட்டியெனை வாட்டுமே மூக்கு!

 

69.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

முட்டியெனைச் சாய்க்கவே முந்து!

 

69.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

முட்டியெனைக் கட்டி முடி!

 

70.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

முட்டியுனை ஏங்குமென் மூச்சு!

 

71.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

முட்டியென் கையை முடக்கு!

 

72.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

முட்டியெனைத் தீர்ப்பாய் முடம்!

 

73.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

முட்டியெனைக் காண்பாய் முடிவு!

 

74.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

முட்டியுனை நீங்குமென் மூப்பு!

 

75.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

கட்டில் கமழும் கனி!

 

76.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

வட்டில் கனிகள் வழங்கு!

 

77.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

தட்டுப் பழங்களைத் தா!

78.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

தட்டுப்போல் நேர்மை தரி!

 

79.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

பட்டுப்போல் வாராய் பறந்து!

 

80.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

கட்டை மனத்தைக் கழி!

 

81.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

குட்டைக் குணங்களைக் கொல்லு!

 

82.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

சட்டை அணியவே தா!

 

83.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

பட்டை விழுமே பழுத்து!

 

84.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

மொட்டைத் தலைக்கேன் முடிச்சு?

 

85.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

முட்டைக் கடையினை மூடு!

 

86.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

நுட்பம் அறிந்தே நுவல்

 

87.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

பெட்புடன் என்னைப் பிடி!

 

88.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

இட்டம்போல் என்னை இறுக்கு

 

89.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

இட்டலி வைப்பாய் எனக்கு!

 

90.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

அட்டமா சித்தி அறி!

 

91.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

அட்டவணை யாவும் அளி!

 

92.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

உட்கட்டுக் காண்போம் உடன்!

 

93.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

உட்கண் தெளிந்தே உரை!

 

94.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

உட்பகை நீக்கல் உயர்வு!

 

95.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

எட்டுத் தொகையை இயம்பு!

 

96.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

ஒட்டணிப் பாக்களை ஓது!

 

97.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

ஒட்டுறவு நீயே உயிர்க்கு!

 

98.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

கட்டளைப் பாக்களைக் கட்டு!

 

99.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

கட்புலன் காணும் கனவு!

 

100.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

சட்டென முத்தங்கள் தா!

 

101.

கட்டழகுக் காரிகையே! கன்னல் கனியமுதே!

சட்டத் தமிழே தலை!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

30.07.2021

வெண்பா மேடை 207

 


வெண்பா மேடை  - 207

                                            

பத்து ஈற்றடிகள்

 

1.

வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்

எண்ணம் இனிக்கும் இசை!

 

2.

வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்

திண்ணம் ஒளிரும்  செயல்!

 

3.

வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்

அண்ணல் குறள்சேர் அறம்!

 

4.

வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்

தண்மை தழைக்கும் தகை!

5.

வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்

வண்மை வளரும் வளம்!

 

6.

வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்

உண்மை ஒளிரும் உளம்!

7.

வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்

மண்ணே மணக்கும் மதி!

 

8.

வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்

கண்ணே கமழும் கவி!

 

9.

வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்

பண்ணே பழுக்கும் படைப்பு!

 

10.

வண்ணத் தமிழ்மொழியே வந்தருள்வாய்! எந்நாளும்

விண்ணே விளிக்கும் விழா!

 

நீங்கள் எழுதும் குறட்பாவின் முதலடிக்குப் பத்து ஈற்றடிகள் பொருந்தும் வண்ணம், பத்துக் குறள்கள் படைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

26.07.2021