நண்பா்களின் வலைப்பூக்களில் என் கவிப்பூக்கள்
வணக்கம்
நம்பிக்கை
வலுபெற்றால் வெற்றி மாலை
நமதடியைத் தேடிவரும்! வானம் முட்ட
எம்பிக்கை
துாக்கிடுக! ஒருநாள் உன்றன்
எண்ணங்கள் நிறைவேறும்! வீணே மண்ணில்
அம்மிக்கல்
போலிருந்தால் அக்கம் பக்கம்
அசைந்துவரும் புழுகூட அழகு காட்டும்!
இம்பி..கை
சோராமல் துணிந்து நிற்பாய்!
நம்பிக்கை! தும்பிக்கை வன்மை தோழா!
11.09.2012
------------------------------------------------------------------------------------------------------
தோழி வணக்கம்!
வாழ்த்துகிறேன்!
தொடா்ந்து எழுது! திறன்வளரும்!
ஆழி சூழ்இவ்
வுலகினியே
அன்னைத் தமிழே முதன்மொழியாம்!
வாழி என்று
செந்தமிழை
வாழ்த்திக் களித்த பாரதியை
நாழிப் பொழுது
நாம்நினைத்தால்
நரம்பில் ஊறும் தமிழுணா்வே!
11.09.2012
------------------------------------------------------------------------------------------------------
வணக்கம்
நற்காதல் வெண்பா நறுமணச் சோலையெனப்
பொற்காதல் வாழ்வைப் புனைந்ததுவே! - சொற்காதல்
நல்கும் சுடா்தமிழை நாடும் சிவகுமரன்
பல்கும் படா்தமிழைப் பார்!
ஈற்றடி யாவும் இனிமையை ஈந்தனவே!
போற்றடி பொங்கும் புகழ்புலமை! - சாற்றுகிறேன்
ஊற்றடி நீா்குளிரும்! உண்மைச் சிவகுமரன்
ஏற்றடி சீா்குளிரும் ஏத்து!

12.09.2012
------------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
பாண்டவரைக் காத்திட்ட பரமன் கண்ணன்
படமிட்ட கலைகண்டு வணங்கும் நெஞ்சம்!
ஆண்டவரை ஆண்டியரை உய்யச் செய்யும்
அரும்படைப்புப் புண்ணயத்தைத் தேடி என்பேன்!
மாண்டவரைக் கண்டுருகும் மனமே! மெய்யின்
வடிவில்லா ஒளிப்பிறப்பை எண்ணிப் பக்தி
பூண்டவரைச் சரணடைக! உண்மை காண்க!
புழுபூக்கும் பல்பிறப்புப் போகும் அற்றே!

பிறவிகள்
வேண்டாம் என்று
பித்தனை வேண்டி நிற்கும்
அறவியல்
பொதிந்த சொற்கள்
அகத்தினில் பதிந்த தென்பேன்!
மறவியல்
மனத்துள் ஊறும்
மாண்கொளிர் தமிழா! ஏனோ
துறவிகள் கூட
இன்று
துணிகிறாய் வாழ்க்கை வாழ!
14.09.2013
------------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!
கம்பனைப்
போற்றும்
கவிஞன்நான்!
வந்தவுடன்
வம்பனைப்
போன்று
வதைக்க
மனமில்லை!
எந்தமிழ்
மக்கள்
இனிய
நலமெய்த
தந்ததமிழ்
தாங்கும்
தலை!
14.09.2012
இனிய நண்பருக்கு
வணக்கம்
வரவேற்று மகிழ்கின்றேன்
உங்கள் வலையைக் கண்ணுற்றேன்
சிறந்த கவிஞருக்கான முத்திரையை அனைத்துப் பக்கங்களிலும் உள்ளன.
நம்தாய்த்தமிழ் மொழியில் நாம் கற்றது கொஞ்சம்!
கற்க வேண்டியவைக் கடலையும் விஞ்சும்
இனிய நண்பா் சிவகுமாரன்
இங்கே அளித்த கருத்துரையில்
கனியின் சுவையை நான்பெற்றேன்!
கவிஞன் என்ற உரமுற்றேன்
பனியின் பொழிவை இந்நாடு
பார்க்கத் தொடங்கும் காலமிது!
இனியென் பாட்டில் குளிருக்கும்
இதயக் கூட்டில் பதித்திடுவீா்!
வரவேற்று மகிழ்கின்றேன்
உங்கள் வலையைக் கண்ணுற்றேன்
சிறந்த கவிஞருக்கான முத்திரையை அனைத்துப் பக்கங்களிலும் உள்ளன.
நம்தாய்த்தமிழ் மொழியில் நாம் கற்றது கொஞ்சம்!
கற்க வேண்டியவைக் கடலையும் விஞ்சும்
இனிய நண்பா் சிவகுமாரன்
இங்கே அளித்த கருத்துரையில்
கனியின் சுவையை நான்பெற்றேன்!
கவிஞன் என்ற உரமுற்றேன்
பனியின் பொழிவை இந்நாடு
பார்க்கத் தொடங்கும் காலமிது!
இனியென் பாட்டில் குளிருக்கும்
இதயக் கூட்டில் பதித்திடுவீா்!
14.09.2012
------------------------------------------------------------------------------------------------------
வணக்கம்
புதிய கவியில்
காதலினைப்
புனைந்த அழகைச் சுவைக்கின்றேன்!
பதியம் போட்டே
இதயத்துள்
படா்ந்த காதல் கொடிமலா்ந்தால்
பதிய செய்யும்
இயந்திரமாய்ப்
பதிக்கும் வண்ணக் கவிதைகளை!
மதிய கோடை
என்செய்யும்
மனமே குளிர்செய் பெட்டியடா!
வலைப்பதிவைக்
கலைப்பதிவாய்
வடிக்கின்ற
அன்பீா் வாழ்க! வளா்க!
நீங்கள் என்
வலையில் பதித்த கருத்தை உணா்ந்தேன்
நல்ல
கருத்தாழமும் வல்ல கற்பனை வளமும்
இனிய தமிழ்ச்
சொல் ஆளுமையும் இருந்தால் போதும் மரபுக் கவிதை பாடலாம்
என் வலையைத்
தொடா்ந்து படித்துவரவும்
மரபின்
இலக்கணத்தை எழுத உள்ளேன்
படித்து அதன்
வண்ணம் கவி பாடி எனக்கு அனுப்புங்கள், செம்மை செய்து அனுப்பி வைப்பேன்
நல்ல தமிழ்க்
கடடுரைப் பகுதி 10 நிறைவுற்றதும்
அதைத்
தொடா்ந்து வல்லின வம்புகள் என்ற கட்டுரை தொடரும்! கவிஞா்களுக்கு அக்கட்டுரை மிக
மிகப் பயன்தரும்
15.09.2012
------------------------------------------------------------------------------------------------------
15.09.2012
------------------------------------------------------------------------------------------------------
ஐயா வணக்கம்!
கருத்துக்
கிங்கே தடைபோடக்
கவிஞன் எனக்கு மனவருமோ?
குருத்துச்
சொற்கள்! குறைசொற்கள்!
கொடுமை கொடுக்கும் கொலைச்சொற்கள்!
இருக்க
வேண்டாம் என்றெண்ணி
இட்டேன் இந்த முறையினையே!
வருத்தம்
வேண்டாம் இதற்காக!
வழிகள் செய்வேன் விரைவினிலே!
உலகம் தமிழை
ஓதிடவே
உழைக்கும் தமிழன்! தமிழ்த்தாய்
திலகம் போன்றே
படைப்புகளைத்
தீட்டி வைப்பேன் திறன்பெறவே!
குலவும் தமிழை
வாழ்வென்று
கொள்கை கொண்டோர் திருவடியை
உலவும்
பொழுதும், என்னான்மா
உறங்கும் பொழுதும் வணங்கிடுமே!
15.09.2012
------------------------------------------------------------------------------------------------------
சிறந்த தொகுப்பு...
RépondreSupprimer/// நம்தாய்த்தமிழ் மொழியில் நாம் கற்றது கொஞ்சம்!
கற்க வேண்டியவைக் கடலையும் விஞ்சும் ///
என்னவொரு தன்னடக்கம் ஐயா...
வாழ்த்துக்கள்... நன்றி...
Supprimerவணக்கம்!
கவிதையில் தந்த கருத்துக்கள் கண்டீா்
அவையனைத்தும் வானின் அமுது!
நல்லதொரு தொகுப்பு...
RépondreSupprimerஉங்கள் தமிழில் தெரியுது உங்கள் இலக்கிய அனுபவம்..
இந்தச் சிறியவன் உங்களைப் போன்றோறின் வழிகாட்டுதலில் (பதிவு) தான் படித்துக் கொண்டிருக்கிறான் இலக்கிய உணர்வுகளை.
Supprimerவணக்கம்!
நாளும் கவிதைகளை நாடிப் படித்திட்டால்
மூளும் இனிமை முதிா்ந்து!
RépondreSupprimerஉந்தம் கவியால் ஒளிரும் பலவலைகள்!
எந்தம் உயா்வென்றே ஏத்துகிறோம்! - சந்தக்
கவியே! கனிச்சுவையே! கற்கண்டே! உம்..பா
புவியே புகழும் பொழில்!
Supprimerவணக்கம்!
பல்லோர் படைத்த பதிவுகளை நான்கண்டு
வல்லோர் வகுத்த வழிநின்று - நல்லோன்நான்
மின்னும் கவிபடைத்தேன்! மீண்டும் பதிவேற்றி
மன்னும் மனத்துள் மகிழ்வு!