உண்ணும் உணவும் உயர்தமிழ்ப் பெயரும்
அல்வா : களினி, தேம்பசை, இன்களி, தீம்பசை
கேசரி : செழும்பம், பழும்பம்
வரிக்கை (பொரை) : வறக்கை
புரூட்
சூசு : பழச்சாறு, கனிச்சாறு,
குருமா : கூட்டாணம்
சப்பாத்தி : கோந்தடை
பச்சி : தோய்ச்சி, மாவேச்சி
பிரட் (ரொட்டி) : மெத்தப்பம்,
செவப்பம்
புரோட்டா : புரியடை
கூல்டிரிங்சு : குளிர்குடிப்பு தண்குடிப்பு
சாம்பார் : பருப்புக்குழம்பு, மென்குழம்பு
நூடுல்சு : இழைமா
ரச்க் : வறைச்சில்
ஐசு : பனிகம்
ஐசுகிரீம் : பனிக்குழைவு, பனிப்பாகு
கோன்
ஐசுகிரீம் : கூம்புப் பனிப்பாகு
சோடா : காலகம், உப்பகம்,
கிச்சடி : காய்ச்சோறு, காய்மா
சட்னி : அரைப்பம், துவையல்
சாங்கிரி
(சிலேபி) : முறுக்கினி
ரோசு
மில்க் : முளரிப்பால், செம்பனிப்பால்
கேக் : கட்டிகை,
சமுதா : கறிப்பொதி,
பாயசம் : பாற்கன்னல், கண்ணமுது
பிஸ்கட் : ஈரட்டி, மாச்சில், முறுவட்டி
போண்டா : உழுந்தை
பஃப் : புடைச்சி
பன் : மெதுவன்
லட்டு : கோளினி
கலர் : வண்ணீர்
காபி : குளம்பி
புரூட்
சாலட் : பழக்கூட்டு, கனிக்கணம்
புரூட்
ஐசு : கனிச்சாறு
டீ : தேநீர்
ஆம்லெட் : முட்டையடை
குலோப்
சாம் : தேங்கோளி
குளுக்கோசு : மாச் சக்கரை
சாக்லெட் : பழுப்பினியம், காவிக்கண்டு,
கருங்காவிக் கண்டு
சிவிங்கம் : சவைப்பயின், தீஞ்சுவை
ரைசு : அரிசி
சாம் : பாகு
(தனித்தமிழ்ச்
சொற்களை அறிந்துகொள்ள
மொழியறிஞர்
ப. அருளி படைத்த
"இவை
தமிழல்ல" என்ற அகராதியைக் கற்குமாறு வேண்டுகிறேன்.
மொழியறிஞர்
ப. அருளி
தனித்தமிழ்
மனை
காளிக்கோயில்
தெரு
தமிழூர்
புதுச்சேரி
- 605 009

