வேல் சித்திர கவிதை - 4
இந்திய விடுதலை வீரர்
தோழர் தா. வாசுதேவப் படையாட்சி
நற்பேர் வாழ்கவே!
நேரிசை ஆசிரியப்பா
வேலேகண் ணாழ்மதி! வாகே வேர்மொழி!
சீரே தேற்றும் நல்லார் பேருளம்!
நீயார் நிலைகாணா நிறையிடு வல்லுநர்!
தாயா ரூர்தான் வாழ வந்தோர்
பேரார் தொண்டர்! போரார் வாசுதேவர்!
வீறார் வியன்றலை வர்!புகழ் தழைத்திடும்
விடுதலை வீரர்! தோழர்!
நடுநிலை யாளர் நற்சீர் வாழ்கவே!
பாட்டரசர் கி. பாரதிதாசன.
20.07.2019
