எடுப்பு
இந்திர லோகத்து முல்லை - இவள்
இன்பத்துக் கேதிங்காம் எல்லை!
தொகுப்பு
மந்திர விழிகளின் தொல்லை - என்
மயக்கமே தீர்ந்திட வில்லை!
முடிப்பு
பூக்களைப் பூத்திடும் சோலை - இந்தப்
பொன்மகள் அணிந்திடும் சேலை!
பாக்களை நெய்திடும் ஆலை - இவள்
பட்டுடல் கவிநிறை சாலை!
சிறப்பினைத் தந்திடும் தொண்டு - ஆம்
திகைத்திட்டேன் இவளிடம் கண்டு
பிறப்பினில் பலவகை யுண்டு - நான்
பிறந்திட்டேன் இவளாசை கொண்டு
RépondreSupprimerவஞ்சிக் கொடியாய் வளர்கின்ற காதலை
நெஞ்சினில் தந்த நெடுங்கவியே! - தஞ்சமென
உன்றன் தமிழிடத்தில் என்றன் உயிர்கிடக்கும்!
என்றும் கவிகள் இசைத்து!
Supprimerவணக்கம்!
கொஞ்சும் தமிழ்குழைத்துக் கோலக் கவிவடித்து
நெஞ்சம் புகுந்தாய் நிலையாக! - விஞ்சும்
சுவையுடன் வெண்பா தொடுத்துள்ளாய்! ஒப்பாய்
எவையுடன் சொல்வேன் இணைத்து!