Affichage des articles dont le libellé est ஐகான் இல்லா வெண்பா. அணியிலக்கணம். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est ஐகான் இல்லா வெண்பா. அணியிலக்கணம். Afficher tous les articles

mardi 21 avril 2020

ஐகான் இல்லா வெண்பா

வெண்பா மேடை - 177
    
ஐகான் இல்லா வெண்பா
    
ஐகார எழுத்தே இன்றிப் பாடப்படுவது 'ஐகான் இல்லா வெண்பா' எனப்படும்.
    
வண்ணம் வளருதடி! எண்ணம் மலருதடி!
பண்ணும் படருதடி பாமகளே! - நண்ணும்
உணர்வுகளால் உள்ளம் உருகுதடி! காதல்
கனவுகளால் பூக்குதடி கண்!
    
இவ்வாறு அமையும் 'ஐகான் இல்லா வெண்பா' ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
    
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
21.04.2020