dimanche 30 août 2015
samedi 29 août 2015
mardi 25 août 2015
சன்னல் ஓரத்து நிலவு
கவிஞர்
த. உரூபனின்
சன்னல்
ஓரத்து நிலவு நூலுக்குச் சாற்றுகவி!
பாவலர்
ரூபனார் நாவளம் மிக்கவர்!
ஆவலாய்த் தமிழைக் காவல் புரிபவர்!
மின்வலை மின்ன இன்றமிழ் பரவ
எழுதிக் குவிப்பவர்! பழத்தின் சுவையவர்!
சொல்லும் செயலும் வெல்லும் வண்ணம்
தொண்டினை ஆற்றி வண்டமிழ் வடிப்பவர்!
செல்லும் இடமெலாம் அல்லும் பகலும்
அன்னைத் தமிழின் தொன்மை உரைப்பவர்!
பொன்சேர் மனமும் நன்சேர் நினைவும்
தம்சேர் வண்ணம் என்றும் வாழ்பவர்!
அன்பின் ஊற்றாய்ப் பண்பின் காடாய்
நெஞ்சம் பெற்றவர்! தஞ்சம் தமிழ்என
என்றும் கிடப்பவர்! மின்வலைத் தளங்களில்
நன்றே
ஆழ்பவர்! நன்மை சூழ்பவர்!
புவிப்பூ யாவும் கவிப்பூ ஏற்க
வலைப்பூ மணக்கக் கலைப்பூ காண்பவர்!
முகநூல் வழியாய் ஆகநூல் நூற்பவர்!
சுகநூல் பின்னித் தகைநூல் தருபவர்!
நல்லார் நட்பை வல்லார் திறனை
நாடிப்
பெற்றுப் பாடிக் களிப்பவர்!
எல்லாத் திசைகளைச் சொல்லால் இழுக்கும்
ஆற்றல்
பெற்றவர்! நாற்றாய்த் தழைப்பவர்!
வீரம்
விளையும் போரொளிர் ஈழ
மண்ணின் மாண்பைக் கண்ணில் கொண்டவர்!
நாட்டுப் பற்றும் பாட்டுப் பற்றும்
உள்ள
உயர்வைச் சொல்லல் எளிதோ?
கவிதைப் போட்டியைப் புவியில் நடத்திக்
கன்னித் தமிழைச் சென்னி தரித்தவர்!
அயலவர்
நிலத்தில் இயலிசைத் தமிழை
வயலென
விளைத்தே உயிரெனக் காத்தவர்!
உண்ணும் உணவாய் ஒண்மை உடையாய்த்;
தண்டமிழ் மொழியைக் கொண்டு சிறந்தவர்!
நண்பர்
ரூபனார் எண்ணிலாக் கீர்த்தியை
என்மனம் எண்ணி இன்புறும் என்பேன்!
சன்னல்
வழியே மின்னும் நிலவென
இந்நூல் உள்ளே தந்த கவிதைகள்
செந்தேன் ஊற்றாய் வந்து குதிப்பன!
அன்னையின் அன்பைப் பொன்னெனப் போற்றும்
பாக்கள் மீதே ஈக்கள் போன்றே
கற்றோர் நெஞ்சம் பற்றிக் கொள்ளும்!
கருவறை
தந்த அரும்..தாய் வாழக்
கழிவரை
உள்ள இழியிடம் கூட
இல்லை
என்றே சொல்லும் அடிகள்
படிக்கும் பொழுது துடிக்கச் செய்யும்!
பெற்றவள் பெருமையைப் பற்றுடன் இந்நூல்
ஓதும்
அடிகள் வேத அடிகளே!
முதியோர் இல்லம் வதியும் பெற்றோர்
கண்ணீர் துடைக்கும் பண்கள் அருமை!
உழைப்பே உயர்வை விளைக்கும் என்று
தீட்டிய பாடல் ஊட்டும் இனிமை!
மங்கை
எழிலைக் கங்கைப் பொழிலாய்
ஏந்தும் பாக்கள்! பூந்தேன் என்பேன்!
காதல்
கவிகளை ஓத ஓதக்
கள்ளின் போதை உள்ளம் ஏகும்!
விழிகள் பேசும் மொழியைப் படித்தே
உயிருள் இன்பப் பயிரும் வளரும்!
முத்த
மழையில் சித்தம் குளிர்ந்து
தந்த
கவிகள் கந்தம் வீசும்!
கன்னி
அழகில் கண்ணன் மயங்கிப்
பின்னிப் படைத்த மின்னல் அடிகள்
புலமை
தந்த வளமை என்பேன்!
இளமை
அளித்த இனிமை என்பேன்!
அழகியல் பொங்கி ஒழுகும் வண்ணம்
புனைந்த கவிதைக் கிணையும் இல்லை!
தேர்போல் சொற்கள் ஊர்வலம் போகும்!
ஏர்போல் உழுது பார்நலம் சூடும்!
சன்னல்
நிலவைக் கன்னல் தமிழில்
காட்டும் ரூபனார்! பாட்டுப் புலவோர்
போற்றிப் புகழ்வார்! ஆற்றின் வளத்தால்
செழிக்கும் ஊராய்க்; கொழித்த புகழில்
செம்மைப் புலவன் கம்பன் போன்றே
வாழ்க!
வளர்க! சூழ்க அருளே!
கவிஞர்
கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
25.08.2015
jeudi 20 août 2015
mercredi 19 août 2015
பதினைந்து மண்டிலம்
பெறுவாய் சிறப்பு!
1.
மறஞ்சேர்! அறஞ்சேர்! அறிவு நெறிசேர்!
திறஞ்சேர்! உறவு மறைசேர் - முறைசேர்
செறித்து! மிறை..தீர்! கறை..தீர்! நறவு
நிறைபோல் பெறுவாய் சிறப்பு!
2.
அறஞ்சேர்! அறிவு நெறிசேர்! திறஞ்சேர்!
உறவு மறைசேர் முறைசேர் - செறித்து!
மிறை..தீர்! கறை..தீர்! நறவு நிறைபோல்
பெறுவாய் சிறப்புமறஞ் சேர்!
3.
அறிவு நெறிசேர்! திறஞ்சேர்! உறவு
மறைசேர் முறைசேர் செறித்து! - மிறை..தீர்!
கறை..தீர்! நறவு நிறைபோல் பெறுவாய்
சிறப்புமறஞ் சேர்அறஞ் சேர்!
4.
நெறிசேர்! திறஞ்சேர்! உறவு மறைசேர்
முறைசேர் செறித்து! மிறை..தீர்! - கறை..தீர்!
நறவு நிறைபோல் பெறுவாய் சிறப்பு!
மறஞ்சேர் அறஞ்சேர் அறிவு!
5.
திறஞ்சேர்! உறவு மறைசேர் முறைசேர்
செறித்து! மிறை..தீர்! கறை..தீர்! - நறவு
நிறைபோல் பெறுவாய் சிறப்பு! மறஞ்சேர்
அறஞ்சேர்! அறிவு!நெறி சேர்!
6.
உறவு மறைசேர் முறைசேர் செறித்து!
மிறை..தீர்! கறை..தீர்! நறவு - நிறைபோல்
பெறுவாய் சிறப்பு! மறஞ்சேர் அறஞ்சேர்!
அறிவு!நெறி சேர்!திறஞ் சேர்!
7.
மறைசேர் முறைசேர் செறித்து! மிறை..தீர்!
கறை..தீர்! நறவு நிறைபோல் - பெறுவாய்
சிறப்பு! மறஞ்சேர் அறஞ்சேர் அறிவு!
நெறிசேர் திறஞ்சேர் உறவு!
8.
முறைசேர் செறித்து! மிறை..தீர்! கறை..தீர்!
நறவு நிறைபோல் பெறுவாய் - சிறப்பு!
மறஞ்சேர் அறஞ்சேர்! அறிவு நெறிசேர்!
திறஞ்சேர்! உறவுமறை சேர்!
9.
செறித்து! மிறை..தீர்! கறை..தீர்! நறவு
நிறைபோல் பெறுவாய் சிறப்பு! - மறஞ்சேர்
அறஞ்சேர்! அறிவு நெறிசேர்! திறஞ்சேர்!
உறவுமறை சேர்!முறை சேர்!
10.
மிறை..தீர்! கறை..தீர்! நறவு நிறைபோல்
பெறுவாய் சிறப்பு! மறஞ்சேர் - அறஞ்சேர்!
அறிவு நெறிசேர்! திறஞ்சேர்! உறவு
மறைசேர் முறைசேர் செறித்து!
11.
கறை..தீர்! நறவு நிறைபோல் பெறுவாய்
சிறப்பு! மறஞ்சேர்! அறஞ்சேர்! - அறிவு
நெறிசேர்! திறஞ்சேர்! உறவு மறைசேர்!
முறைசேர் செறித்து!மிறை.. தீர்!
12.
நறவு நிறைபோல் பெறுவாய் சிறப்பு!
மறஞ்சேர் அறஞ்சேர்! அறிவு - நெறிசேர்!
திறஞ்சேர்! உறவு மறைசேர் முறைசேர்
செறித்து!மிறை.. தீர்!கறை.. தீர்!
13.
நிறைபோல் பெறுவாய் சிறப்பு! மறஞ்சேர்
அறஞ்சேர்! அறிவு நெறிசேர்! - திறஞ்சேர்!
உறவு மறைசேர் முறைசேர் செறித்து!
மிறை..தீர்! கறை..தீர்! நறவு!
14.
பெறுவாய் சிறப்பு! மறஞ்சேர் அறஞ்சேர்!
அறிவு நெறிசேர்! திறஞ்சேர்! - உறவு
மறைசேர் முறைசேர் செறித்து! மிறை..தீர்!
கறை..தீர்! நறவு!நிறை போல்!
15.
சிறப்பு மறஞ்சேர்! அறஞ்சேர்! அறிவு
நெறிசேர்! திறஞ்சேர்! உறவு - மறைசேர்
முறைசேர் செறித்து! மிறை..தீர்! கறை..தீர்!
நறவு!நிறை போல்!பெறு வாய்!
இலக்கணக் குறிப்பு
பதினைந்து மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினைந்து சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!
இலக்கணக் குறிப்பு
பதினைந்து மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினைந்து சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
பதினான்கு மண்டிலம்
என்னவனே... தென்னவனே...
பதினான்கு மண்டிலம்
1.
என்னவனே! இன்னகனே! மன்னவனே! என்மனத்து
நின்றவனே! என்னழகு தின்றவனே! - வென்றவனே!
பொன்னவனே! மென்னகனே! மின்னகனே! வன்னகனே!
தென்னவனே இன்பருள் இன்று!
2.
இன்னகனே! மன்னவனே! என்மனத்து நின்றவனே!
என்னழகு தின்றவனே! வென்றவனே! - பொன்னவனே!
மென்னகனே! மின்னகனே! வன்னகனே! தென்னவனே
இன்பருள்இன்(று) என்னவ னே!
3.
மன்னவனே! என்மனத்து நின்றவனே! என்னழகு
தின்றவனே! வென்றவனே! பொன்னவனே! - மென்னகனே!
மின்னகனே! வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று)
என்னவனே! இன்னக னே!
4.
என்மனத்து நின்றவனே! என்னழகு தின்றவனே!
வென்றவனே! பொன்னவனே! மென்;னகனே! - மின்னகனே!
வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே!
இன்னகனே! மன்னவ னே!
5.
நின்றவனே! என்னழகு தின்றவனே! வென்றவனே!
பொன்னவனே! மென்;னகனே! மின்னகனே! - வன்னகனே!
தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே!
மன்னவ னே!என் மனத்து!
6.
என்னழகு தின்றவனே! வென்றவனே! பொன்னவனே!
மென்னகனே! மின்னகனே! வன்னகனே! - தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே! மன்னவனே!
என்மனத்து நின்றவ னே!
7.
தின்றவனே! வென்றவனே! பொன்னவனே! மென்னகனே!
மின்னகனே! வன்னகனே! தென்னவனே - இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே! மன்னவனே! என்மனத்து
நின்றவ னே!என் னழகு!
8.
வென்றவனே! பொன்னவனே! மென்;னகனே! மின்னகனே!
வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று) - என்னவனே!
இன்னகனே! மன்னவனே! என்மனத்து நின்றவனே!
என்னழகு தின்றவ னே!
9.
பொன்னவனே! மென்னகனே! மின்னகனே! வன்னகனே!
தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே! - இன்னகனே! மன்னவனே! என்மனத்து நின்றவனே! என்னழகு
தின்றவனே! வென்றவ னே!
10.
மென்னகனே! மின்னகனே! வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே! - மன்னவனே!
என்மனத்து நின்றவனே! என்னழகு தின்றவனே!
வென்றவனே! பொன்னவ னே!
11.
மின்னகனே! வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று)
என்னவனே! இன்னகனே! மன்னவனே! - என்மனத்து
நின்றவனே! என்னழகு தின்றவனே! வென்றவனே!
பொன்னவனே! மென்னக னே!
12.
வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே!
இன்னகனே! மன்னவனே! என்மனத்து - நின்றவனே!
என்னழகு தின்றவனே! வென்றவனே! பொன்னவனே!
மென்னகனே! மின்னக னே!
13.
தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே!
மன்னவனே! என்மனத்து நின்றவனே! - என்னழகு
தின்றவனே! வென்றவனே! பொன்னவனே! மென்னகனே!
மின்னகனே! வன்னக னே!
14.
இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே! மன்னவனே!
என்மனத்து நின்றவனே! என்னழகு - தின்றவனே!
வென்றவனே! பொன்னவனே! மென்னகனே! மின்னகனே!
வன்னகனே! தென்னவ னே!
இலக்கணக் குறிப்பு
பதினான்கு மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர்,
இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர்
முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப்
பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து
வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!
19.08.2015
Inscription à :
Articles (Atom)