mercredi 12 septembre 2012

நல்லதமிழ் [ பகுதி - 5 ]





ஏரிக்கரை - ஏரிகரை

ஏரிகரை என்பது சரியாகும். ஏரிக்கரை என்று மிக வேண்டியது, ஏரிகரை என்று இயல்பாக வருவது விதிவிலக்காகும்.. மடுக்கரை, குளக்கரை, வழிக்கரை ஆகிய செலற்களில் வல்லினம் மிகுத்தே எழுத வேண்தும்.

பெண்ணையார் - பெண்ணையாறு

பெண்ணையார், பாலார், அடையார் என்பன பிழைகளாம். பெண்ணையாறு, பாலாறு, அடையாறு என்பனவே சரியாகும்.

முப்பத்தி மூன்று - முப்பத்து மூன்று   

முப்பத்தி மூன்று என்பது பிழை. முப்பத்து மூன்று என்பதே சரி. முன்னூறு என்பது பிழை, முந்நூறு என்பதே சரி. ஐநூறு என்பது பிழை, ஐந்நூறு என்பதே சரி. எட்டு நூறு எனல் வேண்டா, எண்ணூறு என்க. பன்னிரெண்டு என்பது பிழை, பன்னிரண்டு.

பெரும் ஓசை - பேரோசை

பெரும் ஓசை என்பது பிழை, பேரோசை என்பதே சரி. முப்பெரும் விழா என்பது பிழை, முப்பெவிழா என்பதே சரி.

5 ம் நாள் - 5 ஆம் நாள்     

5 ம் நாள் என்று எழுதுவது சரியில்லை. 5ஆம் நாள் என்பதே சரியாகும். 6வது ஆண்டு என்று எழுதுவது சரியில்லை, 6 ஆவது ஆண்டு என்பதே சரியாகும்.

சிலவு - செலவு

பலபேர் சிலவு என்று எழுதுகின்றனர், (செல்லுதல் - செலவு) எனவே செலவு என்று எழுதுக.

சுதந்திரம் - சுதந்தரம்

சுதந்திரம் என்று எழுதாதீர். சுதந்தரம் என்றே எழுதுக. சுந்திரமூர்த்தி, சுந்திரராமன் ஆகிய சொற்களைச் சுந்தரமூர்த்தி, சுந்தரராமன் என்றே எழுதுக.

பட்டணம் - பட்டினம்

பட்டணம்,  பட்டினம் இவை இரண்டும் சரியான சொற்களே. பட்டணம் நகரத்தைக் குறிக்கும். பட்டினம் கடற்கரை ஊரைக் குறிக்கும். (சென்னைப் பட்டணம், காவிரிப் பூம்பட்டினம்) 

கட்டிடம் - கட்டடம்

கட்டு 10 இடம் ஸ்ரீ கட்டிடம் (இடப்பெயர்); கட்டுகின்ற இடத்தையும் கட்டிய வீட்டையும் குறிக்கும். கட்டு 10 அடம் ஸ்ரீ கட்டடம் (தொழிற்பெயர் ஒற்றடம் என்பதில் வருவது போல் அடம் தொழிற்பெயர் ஈறு) கட்டும் தொழிலைக் குறிக்கும். 
                 (தொடரும்)                                                                                                                                                  

4 commentaires:

  1. நிறைய அறிந்து கொள்ள வேண்டியது உள்ளன. நான் முறையே இலக்கணம் கற்றவனல்லன். ஆனால் தமிழை உயிர் போல பாவிப்பவன். தங்கள் வலைத்தளம் என் போன்றோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஓங்கு தமிழை உயிரெனக் காத்திடுவோம்!
      தீங்கிடும் பொய்யரைத் தீய்த்து!

      Supprimer

  2. கோடி கொடுத்தாலும் கோலத் தமிழழகை
    நாடி நலம்பெற நாளின்றி - வாடி
    இருந்தேன்! இதயத்தின் ஏக்கத்தைப் போக்கும்
    அருந்தேன் அளித்தீா் அளந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருந்தேன் அருந்தி அகம்மகிழ் செல்வா!
      வரும்..தேன் அடைகள் வளர்ந்து! - கருந்தேளாய்
      வந்த பிழைகளை வாரி அகற்றிடுவோம்!
      தந்த தமிழைத் தாித்து!

      Supprimer