அகநகர் - புறநகர்
அகப்பகை - புறப்பகை
அகலல் - கிட்டுதல்
அகழ்தல் - தூர்த்தல்
அங்கு - இங்கு
அசல் - நகல்
அடக்கம் - அடங்காமை
அடி - முடி
அடைப்பு - திறப்பு
அண்மை - சேய்மை
அமைதி - குழப்பம்
அர்த்தம் - அநர்த்தம்
அருமை - எளிமை
அருள் - மருள்
அலர்தல் - குவிதல்
அவ்விடம் - இவ்விடம்
அழுக்காறு -அழுக்காறாமை
அறம் - மறம்
ஆக்கம் - கேடு
ஆக்கல் - அழித்தல்
ஆகூழ் - போகூழ்
ஆங்கு - ஈங்கு
ஆசை - நிராசை
(தொடரும்)
இலக்கணம் கற்றே இனியதமிழ் பாடக்
RépondreSupprimerகலக்கும் கவியே! வணக்கம்! - மலர்ந்தாடும்
பூஞ்சோலை உன்வலை! பொற்றமிழ் காய்க்கின்ற
மாஞ்சோலை உன்வலை மாண்பு!
Supprimerவணக்கம்!
எதிர்சொல் அறிந்தே இனியகவி பாடக்
கதிர்ச்சொல் கமழும் என்னுள்! - புதிராகத்
தோண்டச் சுரக்கும் சுடர்தமிழை என்னென்பேன்!
வேண்டச் சுரக்கும் விரைந்து!
ஐயா நான் தங்களை...சென்னையில் சாரல் ஆண்டுவிழாவில் சந்தித்தேன்,,,பிரபு(அருணா சகோ),,,,,,வாழ்த்துகள் ஐயா,,,,,எனக்கு நேரெதிர் சொற்களின் தொகுப்பு வேண்டும்....
RépondreSupprimer