வணக்கம்!
தையே
தமிழர் புத்தாண்டு!
தரணிக்[கு]
இதை..நாம் உரைத்திடுவோம்!
கையோ..
காலோ..பிடித்திடுவார்
கணக்காய்க்
காலை வாரிடுவார்!
மையோ
என்று மனமுடையார்
வாயோ
பொய்யின் இருப்பிடமாம்!
ஐயோ
அவர்கள் வாய்வீரர்!
அகமோ
கழிநீர் உள்ளறையே!
முன்னைத்
தமிழுக் கோர்ஆண்டை
முறையாய்
வகுத்தார் நம்பெரியோர்!
பொன்னை
நிகர்த்த நல்வழியைப்
புல்லன்
பொங்கி எதிர்த்திடுவான்!
தன்னைத்
தலைமை நிலைகாட்டத்
தாவித்
தாவிப் பழிபுரிவான்!
அன்னைத்
தமிழே! ஆரமுதே!
ஆடும்
பகையை ஓட்டுகவே!
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன்
கழகம் பிரான்சு
14.04.2019