வான்மதியே வா..வா..வா
எடுப்பு
வான்மதியே என்னருகே வா!வா!வா! - தமிழ்த்
தேன்மழையை நான்பருகத் தா!தா!தா!
(வான்)
தொடுப்பு
மான்விழியே! வடிவழகே! வா!வா!வா! - உன்
தேன்மொழியை நிதமெனக்குத் தா!தா!தா!
(வான்)
முடிப்புகள்
நல்லதமிழ் பேச்சே உன்மூச்சு - இதை
நானறிந்து நாள்கள் பலவாச்சு!
செல்வமென எனக்கு நீயாச்சு - பிறச்
சிந்தனைகள் எனைவிட் டேபோச்சு!
(வான்)
தென்றலைப்போல் மணக்கும் பூங்காற்று - நீ
செந்தமிழ்போல் இனிக்கும் தேன்ஊற்று!
இன்றளித்த இனிமைக் கேதெல்லை - பாடும்
இளையவளே உனக்(கு)இங்(கு) ஈடில்லை!
(வான்)
30.11.1985
அழகிய கவிமலர்களைப் பூக்கச் செய்யும்
RépondreSupprimerவஸந்தத்திற்கு(காதலுணர்வுக்கு )
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Supprimerவணக்கம்!
வசந்தம் வழங்கும் வளா்தமிழ்ப் பாக்கள்
அசத்தும் அமுதை அளித்து!
tha,ma 2
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வாக்களித்து வல்ல தமிழ்சுவைத்தீா்! நன்றியினை
நாக்களித்து காணும் நலம்!
அழகான வான் மதி ..!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
அழகான வான்மதி அன்னவளை நாளும்
பழமாக உண்டேன் பசித்து!
அழகான பாட்டு... வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
அழகான பாட்டு! மலா்ந்தாடும் காதல்
விழுதான பாட்டு! விளம்பு!
திங்களும் தென்றலும் தீந்தமிழ் பாக்களும்
RépondreSupprimerஉங்களின் கவியின் பொருளதுவோ எங்கள்
உள்ளங்கள் பெருமையில் உவக்கிறதே பாவலரே
வெள்ளமென பாய்கிறதே வியந்து!...
த ம. 4
Supprimerவணக்கம்!
உள்ளமெனும் வயல்செழிக்க ஓங்கும் உயா்தமிழ்
வெள்ளமெனப் பாயும் விரைந்து
RépondreSupprimerவான்மதியே வாவென்று வார்த்த வளா்கவிதை
தேன்நதியோ? தீங்கனியோ? தென்றலோ? - நான்மயங்கி
நிற்கின்றேன்! நெஞ்சுள் நெடுந்தமிழ்ச் சீா்மணக்கக்
கற்கின்றேன் காதல் கலை!
Supprimerவணக்கம்!
கற்றுத் தெளிவதன்று காதல்! விழியழகில்
சற்றே விழுந்தால் விளைந்துவிடும்! - நற்றேன்
சுரக்கும் கவிபடைத்தாய்! துாய மனத்துள்
இருக்கும் இதமாய் இனித்து!