vendredi 24 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 95]




காதல் ஆயிரம் [பகுதி - 95]

846.
பார்த்தகண் மாறாமல் பார்க்கின்றேன்! பாகாக
வோ்த்தஎன் உள்ளம் விரைந்துருகும்! - சோ்த்தவுன்
கற்பனைக் காட்சிகள் மெய்யாக! கண்மணியே
நற்றுணை செய்வாய் நயந்து!

847.
வெள்ளிக் கிழமை விருந்தாய் இனித்திட
வள்ளி வடித்தால் வளா்கவிதை - பள்ளியில்
துள்ளிக்  குதித்தேன்!   தொடர்ந்து  படித்துநான்
அள்ளிக் குடித்தேன் அமுது!

848.
கண்ணோடு  கண்சோ்ந்து காதல் கவிதீட்டும்!
விண்ணோடு கொஞ்சி விளையாடும்! - பெண்ணழகே
எண்ணங்கள்  ஏங்கிப் பெருகுதடி! இன்பூறும்
வண்ணங்கள் ஓங்கி வளா்ந்து!
         
849.
காதோரம் வந்து கவிபாடு! கண்ணா!உன்
துாதுாறும் சொற்கள் சுகமன்றோ! - மோதி 
மனமேறும் தாகம் மதிமயக்கும்! உன்னால்
தினந்தோறும் திண்டாட்டம் தான்!


850. 
கெண்டை விழியிரண்டும் கிள்ளுதடி! என்னுயிரைக்
கொண்டை மலர்க்காட்சி கொள்ளுதடி! - பெண்ணே!உன் 
தண்டை தரும்இசை சண்டை புரியுதடி! 
மண்டை அறைக்குள் மணந்து! 

(தொடரும்)

6 commentaires:

  1. காதல் ரசத்தை தங்கள் அற்புதமான
    கவிதைகளால் ரசித்துக் குடித்து
    மகிழ்ந்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  2. ஏங்கிப் பெருகும் எண்ணங்கள் எங்களை ரசிக்க, மகிழ்விக்க வைத்தது... வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  3. வெள்ளிக் கிழமை விருந்தாய் இனித்திட
    வள்ளி வடித்தால் வளா்கவிதை//எல்லாம் முருகன் செய்த மாயமோ?

    RépondreSupprimer
  4. பார்க்கின்ற காட்சி பாவேந்தே உம்கவியால்
    வார்க்கின்றதே தனியே வண்ணப்படமாக நோக்கின்ற
    கற்பனை நொடியினில் கண்முன்னே சேர்க்கின்றதே
    சிந்தனை எங்கோ பறந்து...

    த ம. 5

    RépondreSupprimer
  5. முக்கனியின் சுவை கூட்டி -நல்
    முழுமதியாய் ஒளி காட்டி
    அக்கரையாய் கவி தீட்டி-நம்
    அழகுதமிழ் அமு தூட்டி
    தக்கவராய் தமிழ்த் தொண்டே-செய்ய
    தவறாமல் தினம் விண்டே
    மிக்கவரே! நான் கண்டே -சொல்ல
    மேதினியில் நீர் உண்டே

    RépondreSupprimer