mardi 14 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 92]




 காதல் ஆயிரம் [பகுதி - 92]



831.
வந்ததும் உன்றன் மதுமடல் பார்த்திடவே
உந்திடும் என்றன் உணா்வுகள்! - இந்நிலையை
எண்ணிப் பார்க்காமல் ஏனோ எனஇருத்தல்
பெண்ணின் பெருமையோ பேசு?

832.
நான்பாதி நீபாதி என்பதை நம்பாதே!
ஏன்பாதி? என்முழுதும் நீ..தானே! - கூன்விழுந்து
ஊன்பாதி உற்ற உயிர்பாதி ஆகும்முன்
வான்சோதி பேரழகே வா!

833.
எல்லாம் எனக்கிங்கு நீஆனாய்! ஏன்கோபம்?
கல்லாம் எனக்குன் கலையழகு!  - முள்ளாம்
மொழியை அகற்றிடுக! மோகத்தை ஊட்டும்
விழியைத் திறந்திடுக வே!

834.
சரியென்று   சொன்னேன்! தமிழாக உன்னைச்
சிரியென்று  சொன்னேன்! சிறந்தேன்! - வரியாய்
ஒளிர்கின்ற பல்லழகு! ஓவியமேகாதல்
வளா்கின்ற முத்தம் வழங்கு!

835.
கட்டி அணைத்திட கண்ணா வருகவே!
ஒட்டி உறவாடி உண்கவே! - கட்டில்மேல்
கொட்டிக் கொடுத்த பலகோடி முத்துக்கு
வட்டி கொடுப்பேன் வளா்த்து

(தொடரும்)

4 commentaires:

  1. கூன்விழுந்து ஊன்பாதி உற்ற உயிர்பாதி ஆகும்முன்
    வான்சோதி பேரழகே வா!// வா வா விரைந்து வா விடியலைத் தா

    RépondreSupprimer
  2. மீண்டும் மீண்டும் படித்து ரசித்து மகிழ்ந்தேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    RépondreSupprimer
  3. ஐயா... கொஞ்சுதமிழில் வடிக்கும் அத்தனை வெண்பாக்களும் ஒன்றையொன்று விஞ்சிநிற்கின்றன. எனைப்பார் எனைப்பாரென கெஞ்சுகின்றன.
    அருமை! அற்புதம்! ரசிக்கின்றேன்.

    * நான்பாதி நீபாதி என்பதை நம்பாதே!
    ஏன்பாதி? என்முழுதும் நீ..தானே! - கூன்விழுந்து
    ஊன்பாதி உற்ற உயிர்பாதி ஆகும்முன்
    வான்சோதி பேரழகே வா!*

    இந்த வெண்பா என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது...
    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    ஈருடல் தங்கி இணைந்தே உள்ளிருக்கும்
    ஓருயிராகுமே காதல்! ஒப்பிலா ஆருயிருடன்
    கலந்து மகிழும் குதூகலிக்கும்! பாதரும்
    பலன்மிகவே.. பகர்கிலேன் பாவைநான்...

    RépondreSupprimer