mardi 28 mai 2013

வா.. வா.. வா ..




வா.. வா.. வா ..

அழகுச் சிலையே வா.. வா.. வா..
அமுத நிலவே வா.. வா.. வா..
பழகு தமிழே வா.. வா.. வா..
பண்பின் ஒளியே வா.. வா.. வா..

அன்பின் உருவே வா.. வா.. வா..
ஆசைக் கனியே வா.. வா.. வா..
இன்பக் கலையே வா.. வா.. வா..
இனிக்கும் மதுவே வா.. வா.. வா..

தென்றற் காற்றே வா.. வா.. வா..
தேனின் சுவையே வா.. வா.. வா..
குன்றாப் புகழே வா.. வா.. வா..
கொஞ்சும் கிளியே வா.. வா.. வா..

08.01.1987

13 commentaires:

  1. ம்ம்ம்ம்..,,,,,

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இம்மென்று நெஞ்சுள் இதமேற என்னவள்
      உம்மென்று தந்தாள் உவந்து!

      Supprimer
  2. உணர்வு பூர்வமான அருமையான
    காதல் கவிதை
    ஏ.எம் ராஜா பாணியில் பாடிப் பார்த்து
    மகிழ்ந்தேன்.தித்தித்தது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காதல் உணா்வூறும் கன்னல் கவிதைகளை
      ஓத ஒளிரும் உயிர்!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்!

      தமிழ்மன நெஞ்சுடையீா்! சால்பறிந்து நாளும்
      தமிழ்மணம் தந்தீா் தழைத்து!

      Supprimer
  4. அய்யா யாரை இப்படிக் கூப்பிட்டீங்க

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வண்ணக் கவிமகளை வாவென்று அழைத்தேன்!என்
      எண்ணம் இனிக்க இசைத்து!

      Supprimer
  5. அழகான அருமையான வரிகள்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருமைத் தமிழில் அளித்த கவிகள்
      பெருமை கொடுக்கும் பெருத்து!

      Supprimer
  6. Réponses

    1. வணக்கம்!

      கவிதரும் வீதியார் கருத்தைப் படித்துக்
      குவித்தேன் இருகை இணைத்து!

      Supprimer

  7. இனிய தமிழ மின்வலை உறவுகளே வணக்கம்!

    இனிக்கின்ற என்றன் எழில்கவி ஓங்க
    மணக்கின்ற வாக்களித்தீா்!என்றன் - வணக்கமே!
    நல்ல மனத்தால் நயந்த தமிழ்வாக்கிற்[கு]
    உள்ளம் கொடுக்கும் உயா்வு!

    RépondreSupprimer