என் கேள்விக்கு என்ன பதில்?
பணமும் வந்த பின்னே - நீ
பண்பை யிழக்க லாமோ?
குணமும் மாறி நீயும் - பிறர்
குடியைக் கெடுக்க லாமோ?
சாதிப் பெயரை வீணே - நீ
பெயரில் சேர்க்க லாமோ?
நீதி நெறியைக் கொன்று - நீ
நேர்மை யிழக்க லாமோ?
நம்பி வந்த பேரை - நீ
நடுவில் விரட்ட லாமோ?
வெம்பி விழுந்த காயை - நீ
விரும்பிச் சுவைக்க லாமோ?
நன்மை செய்த பேரை - நீ
நாளும் மறக்க லாமோ?
வன்மை யோடு வாழ - நீ
மறந்து திரிய லாமோ?
17.07.1986
கருத்து ஆழமாக மனதில் பதியவேண்டுமென
RépondreSupprimerசரளமான நடையில் எளிமையாகச் சொல்லிச் சென்றவிதம்
மனம் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்
Supprimerவணக்கம்!
உலகம் உணர உரைத்த கவிக்குத்
திலகம் அளித்தீா் திளைத்து!
tha.ma 1
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
முதல்வாக்கு அளித்தீா்! மொழிகின்றேன் நன்றி!
மது..நாக்குக் காணும் மகிழ்வு!
நன்றாகச் சொன்னீர் அய்யா. தன்னலமறியா சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கூடஇ தங்கள் சாதியைச் சேர்ந்தவர் ,இவர் எங்கள் சாதியைச் சேர்ந்தவர் என ஒரு சாதி வளைய்த்திற்குள் அடைத்து விளம்பரம் தேடும், முயற்சியும், தங்கள் சாதி அமைப்பை வளர்க்க,தன்னலமற்ற தியாகிகளின் படங்களை பயன்படுத்துவதும் . என்னென்று சொல்வது அய்யா.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
பாட்டி உரைத்திட்ட பாட்டை உணா்ந்திட்டால்
நாட்டில் வருமோ நலிவு!
பாட்டி - ஓளவை
அருமை... சிந்திக்க வேண்டிய கேள்விகள்... வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
சிந்திக்க வேண்டிச் செதுக்கிய கேள்விகளைச்
சந்திக்க நீங்கும் தடை!
நன்றாகக் கேட்டீர்கள் ஐயா!
RépondreSupprimerகவியில் காதல்மட்டுமில்லை கனக்குமிதயக்குமுறலையும் காட்டுகின்றீர்கள்!
அருமையாக உள்ளது அன்றே எழுதிய கவியென்றாலும் இன்றும்.
ஆனால் அதன்தேவை இன்றும் உள்ளது கவலயே...
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!
த ம. 3
Supprimerவணக்கம்!
இளமதி தந்திட்ட இன்றேன் வரிகள்
உளமதில் ஊட்டும் உணா்வு!
தகாத செயல்கள் தான் இவைகள் இருப்பினும்
RépondreSupprimerஎல்லாம் தெரிந்தும் பலரும் இதையே செய்வது
வருத்தமளிகின்றது .வாழ்த்துக்கள் ஐயா சிறப்பான
படைப்பிற்கு .
Supprimerவணக்கம்!
அம்பாள் அளித்த அருந்தமிழ்ச் சொல்யாவும்
செம்பால் இனிப்பெனச் செப்பு!
நன்மை செய்த பேரை - நீ
RépondreSupprimerநாளும் மறக்க லாமோ?
வன்மை யோடு வாழ - நீ
மறந்து திரிய லாமோ?
கேள்விக்கணைகள்..!
Supprimerவணக்கம்!
கேள்விக் கணைகள்..நம் கேடகற்றும்! வாழ்க்கையில்
தோல்வி வருமோ தொடா்ந்து!
RépondreSupprimerநாட்டைப் புதுக்கும்! நலமெல்லாம் வந்தெய்தும்!
கேட்டை அகற்றும்! கிழக்காகும்! - காட்டைத்
திருத்தி வயலாக்கும்! தீங்கவி பாட்டைக்
கருத்தில் பதிப்பீா் கணித்து!
Supprimerவணக்கம்!
தமிழ்ச்செல்வன் தந்த தகைமைக் கருத்தை
அமிழ்தென உண்டேன் அகத்து!
RépondreSupprimerமின்வலை உறவுகளே வணக்கம்!
அன்று வடித்த அருந்தமிழ்ப் பாட்டுணா்ந்து
இன்று வடித்த கருத்திற்கென் - நன்றிகள்!
உங்கள் வருகையால் உள்ளம் உவந்தாடிப்
பொங்கும் கவிதைப் புனல்!
அய்யா, இது மினவலை உறவுகள் அல்ல...
Supprimerதமிழ் வழி உறவுகள்...
அழகான கேள்விக் கணைகளை தொடுத்துள்ளீர்கள் அய்யா...
RépondreSupprimerஎளிமையாக கேட்டுள்ளீர்கள்...
அழகு...