மாங்குயிலே... பூங்குயிலே
மல்லிகை மலர்சூடிப் - பாடும்
மாங்குயில் நீவாடி!
பல்லவன் எனைத்தேடித் - கொஞ்சும்
பைங்கிளி நீவாடி!
துள்ளிடும் மானினமே - உன்னால்
தொல்லைகள் தொலைந்திடுமே!
பள்ளியில் முதலிடமே - என்றும்
பரிசுகள் உன்னிடமே!
செங்கனி கன்னந்தான் - உடல்
செந்துர வண்ணந்தான்!
மங்கைநீ அன்னந்தான் - இனிய
மதுநிறை கிண்ணந்தான்!
கவிதரும் கண்மணியே - என்னைக்
கவர்ந்திடும் விண்மணியே!
புவிபுகழ்ப் பெண்மணியே - உள்ளம்
ஓளிர்ந்திடும் பொன்மணியே!
10.01.1987
மங்கைநீ அன்னந்தான் - இனிய
RépondreSupprimerமதுநிறை கிண்ணந்தான்!//பருகுங்கள் பாட்டைத் தொடர்ந்து எழுதுங்கள்
Supprimerவணக்கம்
மங்கை மலா்மேனி! மன்னன் கவிதேனி!
கங்கைப் பெருக்காய்க் கனவு!
மாங்குயில் ஓசையில்
RépondreSupprimerசொக்கிப்போனது மனது
தொடர வாழ்த்துக்கள்
Supprimerவணக்கம்!
சொக்கும் அழகே! சுடா்க்கொடியே! சுற்றுகிற
செக்கென என்னைச் செலுத்து!
tha.ma 5
RépondreSupprimer
Supprimerஎண்ணம் இனிக்க இனிய தமிழ்மணத்தின்
வண்ணம் அளித்தீா் மகிழ்ந்து!
ஒவ்வொரு வரியும் ரசித்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
ஒவ்வொரு சீரும் உயிரை உருக்குமே!
செவ்விதழ்த் தேனைத் தெளித்து!
பள்ளியில் முதலிடமே - என்றும்
RépondreSupprimerபரிசுகள் உன்னிடமே!
இனிய வாழ்த்துகள்..!
Supprimerவணக்கம்!
பள்ளிப் பருவத்தில் பாவை மொழிகேட்டுத்
துள்ளிக் குதிப்பேன் சுழன்று!
கன்னல் மொழியாளை காட்டும் அடையாளம்
RépondreSupprimerமின்னல் ஒளியென மிளிருதே எங்கள்
தங்கத்தமிழின் தலைமகன் தரும் பாவால்
திங்களும் சிவக்குமே சிலிர்த்து...
மிகமிக அருமை அன்றும் இன்றும் உங்கள் பாக்கள்!
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!
த ம. 8
Supprimerவணக்கம்!
கன்னல் மொழியழகு! காந்த விழியழகு!
இன்னல் அகற்றும் எனக்கு!
மணி மணியாய் வரிகள் ரசிக்க வைத்தது ஐயா.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
மணிமணியாய் நான்பாட மங்கை வடிவம்
அணிஅணியாய் மின்னும் அகத்து!
கவிதரும் கண்மணியே - என்னைக்
RépondreSupprimerகவர்ந்திடும் விண்மணியே!
அருமை அய்யா நன்றி
Supprimerவணக்கம்!
புவிபெறும் நற்குளிர்ச்சி போன்றே இனிய
கவிவரும் காற்றாய்க் கழந்ந்து
RépondreSupprimerமாங்குயிலே என்றும்! மதுத்தமிழ் பாடுகின்ற
பூங்குயிலே என்றும் புனைந்துள்ளீா்! - தேங்கனிபோல்
நற்சுவை நல்கும் நறுங்கவியே! உம்முடைய
சொற்சுவை நல்கும் சுகம்
புலவா் இனிய. தமிழ்ச்செல்வன்
பிரான்ஸ்
Supprimerவணக்கம்!
இனிய தமிழ்ச்செல்வன் ஈந்தகவி இன்பம்
கனிய கொடுக்கும் கமழ்ந்து! - பனிபோல்
குளிரும் கருத்தெழுதிக் கொள்ளை புரிந்து
மிளிரும் புகழினை மீட்டு!
வணக்கம்!
Supprimerபெருமை மணக்கும் பிரான்சுஎன்று சொல்க!
அருமைத் தமிழே அழகு