jeudi 23 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 94]




காதல் ஆயிரம் [பகுதி - 94]



841.
பெரும்சிற்பி நுட்பமுடன் பெற்ற சிலையே!
கரும்பேந்தி நிற்கும் கலையே! - விருந்தொன்றைக்
கண்டுவக்கும் ஏழையெனக் காதல் கவிஞன்யான்
கொண்டுவக்கும் பூங்குயிலே கொஞ்சு!

842.
தொடுகின்ற காலத்தில் துாயவனே உன்..கை
இடுகின்ற இன்பத்தை ஆ..ஆ..! - மடு..மோதிப்
பாய்ந்தோடும் வெள்ளமெனப் பாய்விரித்து மஞ்சத்தை
ஆய்தோடும் ஆசை அலை!

843.
கூட்டிப் பெருக்குகிறாள்! கொள்ளை அழகாலே
வாட்டி வதைக்குகிறாள்! வண்ணவிழி - காட்டி
மயக்குகிறாள்! பேசி மடக்குகிறாள்! என்னை
இயக்குகிறாள் இன்பம் இசைத்து!

844.
கண்களில் நின்றாடும் காரிகையே! இவ்வுலகப்
பெண்களில் நீ..மின்னும் பேரழகி! -  பண்களில்
உன்னைப் படைக்கின்றேன்! ஊறும் நினைவுகளில்
என்னை மறக்கின்றேன் இங்கு!

845.
குளிர்ஊட்டும் கோதையே! கொஞ்சுதமிழ்  போன்று 
மலா்ஊட்டும் போதையே! வாழ்வை - வளமாக்கும்
வஞ்சியே! இன்கவி மாரியே! உன்னழகில்
நெஞ்சியே ஏங்கும் நெகிழ்ந்து!.

(தொடரும்)

5 commentaires:

  1. மயங்கித்தான் போனேன்... அருமையான வரிகள்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  2. தொடுகின்ற காலத்தில் துாயவனே உன்..கை
    இடுகின்ற இன்பத்தை ஆ..ஆ..! ////ஆஹா...ஆஹா...அற்புதம்

    RépondreSupprimer
  3. //கூட்டிப் பெருக்குகிறாள்! கொள்ளை அழகாலே
    வாட்டி வதைக்குகிறாள்! வண்ணவிழி - காட்டி
    மயக்குகிறாள்! பேசி மடக்குகிறாள்! என்னை
    இயக்குகிறாள் இன்பம் இசைத்து//
    //குளிர்ஊட்டும் கோதையே! கொஞ்சுதமிழ் போன்று
    மலா்ஊட்டும் போதையே! வாழ்வை - வளமாக்கும்
    வஞ்சியே! இன்கவி மாரியே! உன்னழகில்
    நெஞ்சியே ஏங்கும் நெகிழ்ந்து!//
    அருமை

    RépondreSupprimer
  4. சிலையாக இருக்கிறாள் செந்தமிழாள்
    கலையாக கருவாக கவியேயும்பாவினால்
    மலையாக மகிழ்வாக மாறாவியப்போடு
    விலையாகிப் போனாளோ உம்மிடம்...

    த ம 4

    RépondreSupprimer
  5. //பெரும்சிற்பி நுட்பமுடன் பெற்ற சிலையே!// கவிதை வரிகளில் உயிர் ஓவியம் தீட்டுவதால், நீங்கள் தான் பெரும் சிற்பி...

    RépondreSupprimer