dimanche 5 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 84]




காதல் ஆயிரம் [பகுதி - 84]


791.
கண்கட்டும் வித்தைகளைக் கற்றவளே! என்னாசை
மண்தொட்டும் விண்தொட்டும் வந்தாடும்! - பொன்கொட்டும்!
பூ..கொட்டும்! ஓங்கிப் புகழ்கொட்டும்! காதலால்
பா..கொட்டும் பாடிப் பற!

792.
சுகமான பாக்களில் சொக்கியே உன்னை
அகமான ஆழ்கடலில் வைத்தேன்! - பகலில்
சோகத்தில் என்னுயிரைச் சுட்டாலும் நல்லிரவில்
மோகத்தில் மூழ்குமே மூச்சு!

793.
பூக்கள் மலர்ந்தாடும்! பொற்பாவைப் புன்னகையில்
பாக்கள் மலர்ந்தாடும்! பாடுமெனை - ஊக்கமுடன்
தாக்கப் பறந்தாடும் தண்ணழகே! இன்பத்தை
ஆக்கப் பறந்தாடும் அன்பு!

794.
செல்வனே! என்னினிய சிந்தை நிறைந்தவனே!
மல்லனே! மாய மனத்தவனே! - வெல்லனே!
கள்ளனே! காதல் கணிப்பவனே! நற்கவிதை
வெள்ளனே! வா!வா விரைந்து!

795.
செல்லமே என்று..நீ சொல்லும் பொழுதெல்லாம்
கொல்லுமே என்னைக் கொடுமாசை! - வல்லவனே!
கல்லுமே மெல்லக் கசிந்துருகும் சொல்லாற்றல்!
கள்ளுமே உன்றன் கவி!

(தொடரும்) 
 

6 commentaires:

  1. பூக்கள் மலர்ந்தாடும்! பொற்பாவைப் புன்னகையில்
    பாக்கள் மலர்ந்தாடும்! பாடுமெனை - ஊக்கமுடன்
    தாக்கப் பறந்தாடும் தண்ணழகே! இன்பத்தை
    ஆக்கப் பறந்தாடும் அன்பு!

    அழகுப் பா ..பாராட்டுக்கள்..

    RépondreSupprimer
  2. மின்னல் பொழுதுக்குள் மிகுபாக்கள் படிக்கும்
    கன்னல் கவியரசே கம்பரின் உடன்பிறப்பே
    உங்கள் பாடலால் உயிர்வாழும் எம்தமிழின்னும்
    திங்களென குளிருதே தீண்டியெமை சிலிர்க்குதே...

    த ம.2

    RépondreSupprimer
  3. அழகு... அருமையான வரிகள்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  4. சூப்பரா இருக்கு காதல் கொட்டும் கவி...

    RépondreSupprimer
  5. எனக்கொரு சந்தேகம்.. பொடியன்.. என்றுதானே வரும்.. இல்லை, பொடியான்.. என்பதுதான் சரியான தமிழோ?

    RépondreSupprimer
  6. கண்கட்டும் வித்தைகளைக் கற்றவளே! என்னாசை
    மண்தொட்டும் விண்தொட்டும் வந்தாடும்! - பொன்கொட்டும்!
    பூ..கொட்டும்! ஓங்கிப் புகழ்கொட்டும்! காதலால்
    பா..கொட்டும் பாடிப் பற!

    உண்மைதான் ஐயா காதல் உணர்வுகள் மனதில் உள்ளவரைக்
    கவிதைப் பாக்களும் பெருகிக்கொண்டே தான் இருக்கும்!
    வாழ்த்துக்கள் இனிய கவிதை வரிகள் மேலும் சிறப்பாகத்
    தொடரட்டும் .

    RépondreSupprimer