இன்பம் வீசுமே
கண்ணும் கண்ணும் பேசுமே - பூங்
காற்றாய் இன்பம் வீசுமே!
எண்ணம் எண்ணம் சேருமே - மன
ஏக்கம் எல்லாம் தீருமே!
இரவும் பகலும் இனிக்குமே - நம்
இளமைச் சூட்டைத் தணிக்குமே!
கரமும் கரமும் இணையுமே - மனம்
களிப்பாம் மழையில் நனையுமே!
கனவும் நினைவும் வளருமே - தேன்
கவிதை தினமும் மலருமே!
மனமும் மனமும் மயங்குமே - ஏதும்
வார்த்தை இன்றித் தயங்குமே!
15.05.1985
15.05.1985
ம்ம்ம்...
RépondreSupprimerஇரவும் பகலும் இனிக்குமே - நம்
RépondreSupprimerஇளமைச் சூட்டைத் தணிக்குமே!//உண்மைதான் அய்யா இன்னுமா?
தேன் கவிதை தினமும் மலருமே!
RépondreSupprimerபாராட்டுக்கள்...
இனிமையான வரிகளும் எங்களை ரசிக்க வைக்குமே...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
என்றும் பேசும் எங்கள் தமிழ்தான்
RépondreSupprimerநின்று நிலைத்து நினைவில் தோன்றும்
குன்றும் சிலிர்க்க கூறும் பாக்கள்
இன்றும் உள்ளதே இனிதாய்தானே...
த ம 4
இனிமை பேசும் கவிதை
RépondreSupprimer15.05.1985 அன்று எழுதிய கவிதையா?
RépondreSupprimer