காதல் ஆயிரம் [பகுதி - 88]
811.
தாக்கிக் தகா்த்தாலும் போக்கித் துடைத்தாலும்
தேக்கிச் செழிக்குதடி உன்னினைவு! - நோக்கும்
திசையெல்லாம் தேவியுன் பொன்முகம் மின்னும்!
இசைவெல்லாம் காட்டும் இனித்து!
812.
பலகோடி செல்வம் படைத்தென்ன? பெண்ணே
நலங்கோடி உன்வரவே நல்கும்! - நிலவே
ஒருகோடி இன்பம் தருகின்ற பாக்கள்
அருங்கோடி வாழ்வை அளந்து!
813.
மடல்ஏன் எழுதவில்லை! மங்கை..நீ யின்றி
உடல்ஏன்? இயங்கும் உயிர்ஏன்? - இடா்என்ன
வந்தாலும் ஏற்பேன் மயிலே உனக்காக!
வந்தாளும் இன்பம் வடித்து!
814.
இங்கே நலமாய் இருக்கின்றாய்! அன்பே..நான்
அங்கே நலமா? பதில்அளிப்பாய்! - எங்கே
இருந்தாலும் நம்முயிர் ஒன்றி இணையும்
பெருங்காதல் பித்தம் பிடித்து!
815.
மலைபோல் கவியெழுதி மங்கை மனத்தை
உலைபோல் உருக்கும் நிலையேன்? - கலைசோ்
சிலைபோல் செதுக்கிச் சிரிக்கின்ற பாக்கள்
வலைபோல் பிடிக்கும் வளைத்து!
(தொடரும்)
815 : மிகவும் ரசித்தேன் ஐயா...
RépondreSupprimerதொடர வாழ்த்துக்கள்...
வணக்கம் ஐயா!
RépondreSupprimerஅன்னையர் தின வாழ்த்துக்கள் முதலில் இங்கே உரித்தாகட்டும் .
சிறப்பான கவிதை வரிகளை எந்நாளும் இதயத்தில் இருந்து
ஈன்றெடுப்பவர்கள் கவிஞர்கள் அந்தவகையிலும் உங்களுக்கு
என் இனிய வாழ்த்துக்கள்.மனம் என்னும் பூங்காவில் மணம்
வீசிடும் இக் கவிதை வரிகள் எந்நாளும் சிறப்பெய்தி வாழ்கவே!
பலகோடி செல்வம் படைத்தென்ன? பெண்ணே
நலங்கோடி உன்வரவே நல்கும்! - நிலவே
ஒருகோடி இன்பம் தருகின்ற பாக்கள்
அருங்கோடி வாழ்வை அளந்து!
அருமை அய்யா
RépondreSupprimerஉலைபோல உருகும் நிலையேனோ !ரசித்த வரிகள் தொடருங்கள் ஐயா!
RépondreSupprimer