அன்பைப் பொழிந்தான்
பட்டு வேட்டிக் காரன் - என்னைப்
பார்த்துப் பார்த்துச் சிரித்தான்!
கிட்ட வந்து நெஞ்சை - அவன்
கிள்ளிக் கிள்ளி முறைத்தான்!
வட்ட முகத்துக் காரன் - மனதில்
வந்து வந்து நடித்தான்!
கட்டுப் பாடே இன்றிக் - கனவில்
கட்டிக் கட்டிப் பிடித்தான்!
வெட்ட வெளியின் பக்கம் - என்னை
வேண்டி வேண்டி அழைத்தான்!
திட்டம் போட்டு வந்தே - அழகைத்
தீண்டித் தீண்டிச் சுவைத்தான்!
தொட்டுத் தொட்டு என்னைத் - தோழி
தொடா்ந்து அரட்டை அடித்தான்!
அட்டை போல ஒட்டி - நாளும்
அமுதை அள்ளிக் குடித்தான்!
10.01.1985
10.01.1985
போங்க அய்யா...!
RépondreSupprimerஎங்கேயோ சிந்தனையை-
சிதறடிசிடிங்க...!
நன்றி அய்யா!
Supprimerவணக்கம்!
சிட்டுக் குருவியாய்ச் சீறிப் பறக்கிறேன்!
கட்டழகைக் கண்டு களித்து!
திட்டம் போட்டு வந்தே - அழகைத்
RépondreSupprimerதீண்டித் தீண்டிச் சுவைத்தான்!//
அன்பை மட்டுமல்ல அமுதையும் சுவைத்தான் அல்லவோ?
Supprimerவணக்கம்!
அன்பாம் அமுதை அருந்தியே என்மனனே
இன்பாம் கவிகள் இயற்று!
அருமை அய்யா.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
அருமை அருமையென ஆடுகிறேன்! பாக்கள்
பெருமை பெருமையெனப் பெற்று!
உங்கள் கவிதை என்ற தமிழ் அமுதத்தை நாங்களும் அள்ளிக் குடித்தோம். மிக அருமையான கவிதை
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
அமுதைப் பொழியும் அவள்விழிகள்! என்றும்
குமுதை நிகா்த்ததெனக் கூறு
ரசிக்க வைக்கும் படி செய்து விட்டார் - பட்டு வேட்டிக் காரன்...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
நன்றி...
Supprimerவணக்கம்!
வெண்பட்டு வேட்டி! விழிதொட்டு மின்னுதடி!
புண்பட்டுப் போனேன் புரண்டு!
காதல் கவிதை இது
கற்கண்டு சுவை தருது
ஆதல் சுவை கண்டேன்
அன்புடனே இதை விண்டேன்!
Supprimerவணக்கம்!
காதல் கவியினிக்கும்! கண்கள் கணைதொடுக்கும்
மோதல் கவியினிக்கும் ஓது!
பட்டு கிட்டு ட்டுச்சொல்லால்
RépondreSupprimerகட்டுக்குலையா காதற்சுவையால்
முட்டி மோகம் முட்டப்பாட்டால்
தட்டிதந்த தமிழ்க்கவியே வாழி!
த ம.6
Supprimerவணக்கம்!
கொட்டும் மழையெனக் கொஞ்சும் கவிகொடுத்தாள்!
கட்டும் மலராய்க் கமழ்ந்து!