jeudi 9 août 2018

வெண்பா மேடை - 97


வெண்பா மேடை - 97
     
காலில்லா வெண்பா
        
கண்புகுந்த செந்தமிழே! கன்னல் கவியென்றன்
பண்புகுந்த பைந்தமிழே! தண்டமிழே! - மண்புகுந்த
புன்வெறியை முற்றும் புதைத்திடவே, திண்மையுடன்
நன்னெறியை நன்றே நவில்!
    
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
    
காலுடைய எழுத்துகளும் [கா, ஙா, சா, டா....], ளகர வருக்க எழுத்துகளும் [ள், ள, ளா, ளி...], ரகர வருக்க எழுத்துகளும் [ர், ர, ரா, ரீ...] இப்பாடலில் வாரா. இவ்வெழுத்துகள் இன்றி வரும் பாடலைக் காலில்லாப் பாட்டென்பர்.
    
விரும்பிய பொருளில் 'காலில்லா வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து காலில்லா வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
    
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
09.08.2018

காலில்லா வெண்பா

Aucun commentaire:

Enregistrer un commentaire