jeudi 16 août 2018

வெண்பா மேடை - 104


வெண்பா மேடை - 104
  
அடி மறி இன்னிசைப் பஃறொடை வெண்பா!
[இவ்வெண்பா என்னுடைய உருவாக்கம்]
  
மதுக்கொண்[டு] இணைவாய் மலர்ந்து! தமிழே
எதுவுண்[டு] உனக்கிணை இங்கு? இனிய
புதுச்செண்டு வாசத்தைப் பூண்டு கமழ்வாய்!
பொதுவென்று சிந்தனை பூத்து மகிழ்வாய்!
நதியென்று வாராய் நடந்து! பொழிலே
துதிகொண்டு இசைப்பேன் தொடர்ந்து! குறளே!
மதிதந்து காப்பாய் மகிழ்ந்து!
  
மேற்கண்ட பாடலில் முதலில் உள்ள ஆறடிகளை இடம் மாறி அமைத்தாலும், பொருளும் யாப்பும் குன்றாமல் பாடல் அமையும். ஈற்றடியை முன்னுள்ள ஆறடிகளில் முன் மூன்று சீர்களின் இடத்தில் மாற்றி அமைத்தாலும் பொருளும் யாப்பும் குன்றாமல் அமையும்.
  
முன்னடிகள் இடம் மாறி வந்தன
  
புதுச்செண்டு வாசத்தைப் பூண்டு கமழ்வாய்!
பொதுவென்று சிந்தனை பூத்து மகிழ்வாய்!
மதுக்கொண்[டு] இணைவாய் மலர்ந்து! தமிழே
எதுவுண்[டு] உனக்கிணை இங்கு? இனிய
துதிகொண்[டு] இசைப்பேன் தொடர்ந்து! குறளே!
நதியென்று வாராய் நடந்து! பொழிலே
மதிதந்து காப்பாய் மகிழ்ந்து!
  
ஈற்றடி முதலடியாய்!

மதிதந்து காப்பாய் மகிழ்ந்து! தமிழே
எதுவுண்[டு] உனக்கிணை இங்கு? இனிய
புதுச்செண்டு வாசத்தைப் பூண்டு கமழ்வாய்!
பொதுவென்று சிந்தனை பூத்து மகிழ்வாய்!
நதியென்று வாராய் நடந்து! பொழிலே!
துதிகொண்டு இசைப்பேன் தொடர்ந்து! குறளே!
மதுக்கொண்[டு] இணைவாய் மலர்ந்து!
  
ஈற்றடி இரண்டாம் அடியாய்!
மதுக்கொண்[டு] இணைவாய் மலர்ந்து! தமிழே
மதிதந்து காப்பாய் மகிழ்ந்து! இனிய
புதுச்செண்டு வாசத்தைப் பூண்டு கமழ்வாய்!
பொதுவென்று சிந்தனை பூத்து மகிழ்வாய்!
நதியென்று வாராய் நடந்து! பொழிலே
துதிகொண்[டு] இசைப்பேன் தொடர்ந்து! குறளே!
எதுவுண்[டு] உனக்கிணை இங்கு?
  
இவ்வாறு ஈற்றடி எவ்விடத்திலும் மாறி அமைந்தும் பொருளும் யாப்பும் குன்றாமல் அமையும்.
  
இவ்வாறு அமைந்த 'அடி மறி இன்னிசைப் பஃறொடை வெண்பா' ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து அடி மறி இன்னிசைப் பஃறொடை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
16.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire