dimanche 19 août 2018

வெண்பா மேடை - 107


வெண்பா மேடை - 107
  
பதினான்கு மண்டில வெண்பா
  
1.
என்னவனே! இன்னகனே! மன்னவனே! என்மனத்து
நின்றவனே! என்னழகு தின்றவனே! - வென்றவனே!
பொன்னவனே! மென்னகனே! மின்னகனே! வன்னகனே!
தென்னவனே இன்பருள் இன்று!
  
2.
இன்னகனே! மன்னவனே! என்மனத்து நின்றவனே!
என்னழகு தின்றவனே! வென்றவனே! - பொன்னவனே!
மென்னகனே! மின்னகனே! வன்னகனே! தென்னவனே
இன்பருள்இன்(று) என்னவ னே!
  
3.
மன்னவனே! என்மனத்து நின்றவனே! என்னழகு
தின்றவனே! வென்றவனே! பொன்னவனே! - மென்னகனே!
மின்னகனே! வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று)
என்னவனே! இன்னக னே!
  
4.
என்மனத்து நின்றவனே! என்னழகு தின்றவனே!
வென்றவனே! பொன்னவனே! மென்னகனே! - மின்னகனே!
வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே!
இன்னகனே! மன்னவ னே!
  
5.
நின்றவனே! என்னழகு தின்றவனே! வென்றவனே!
பொன்னவனே! மென்னகனே! மின்னகனே! - வன்னகனே!
தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே!
மன்னவ னே!என் மனத்து!
  
6.
என்னழகு தின்றவனே! வென்றவனே! பொன்னவனே!
மென்னகனே! மின்னகனே! வன்னகனே! - தென்னவனே
இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே! மன்னவனே!
என்மனத்து நின்றவ னே!
  
7.
தின்றவனே! வென்றவனே! பொன்னவனே! மென்னகனே!
மின்னகனே! வன்னகனே! தென்னவனே - இன்பருள்இன்(று)
என்னவனே! இன்னகனே! மன்னவனே! என்மனத்து
நின்றவ னே!என் னழகு!
  
8.
வென்றவனே! பொன்னவனே! மென்னகனே! மின்னகனே!
வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று) - என்னவனே!
இன்னகனே! மன்னவனே! என்மனத்து நின்றவனே!
என்னழகு தின்றவ னே!
  
9.
பொன்னவனே! மென்னகனே! மின்னகனே! வன்னகனே!
தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே! - இன்னகனே!
மன்னவனே! என்மனத்து நின்றவனே! என்னழகு
தின்றவனே! வென்றவ னே!
  
10.
மென்னகனே! மின்னகனே! வன்னகனே! தென்னவனே!
இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே! - மன்னவனே!
என்மனத்து நின்றவனே! என்னழகு தின்றவனே!
வென்றவனே! பொன்னவ னே!
  
11.
மின்னகனே! வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று)
என்னவனே! இன்னகனே! மன்னவனே! - என்மனத்து
நின்றவனே! என்னழகு தின்றவனே! வென்றவனே!
பொன்னவனே! மென்னக னே!
  
13.
வன்னகனே! தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே!
இன்னகனே! மன்னவனே! என்மனத்து - நின்றவனே!
என்னழகு தின்றவனே! வென்றவனே! பொன்னவனே!
மென்னகனே! மின்னக னே!
  
13.
தென்னவனே இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே!
மன்னவனே! என்மனத்து நின்றவனே! - என்னழகு
தின்றவனே! வென்றவனே! பொன்னவனே! மென்னகனே!
மின்னகனே! வன்னக னே!
  
14.
இன்பருள்இன்(று) என்னவனே! இன்னகனே! மன்னவனே!
என்மனத்து நின்றவனே! என்னழகு - தின்றவனே!
வென்றவனே! பொன்னவனே! மென்னகனே! மின்னகனே!
வன்னகனே! தென்னவ னே!
  
பதினான்கு மண்டிலம் என்பது முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்கு சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா! பதினான்கு மண்டில வெண்பா வழி எதுகையில் மட்மே அமையும். [வழி எதுகை என்பது அனைத்துச் சீர்களும் ஓரெதுகை பெறுவது]
  
விரும்பிய பொருளில் 'பதினான்கு மண்டில வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து பதினான்கு மண்டில வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
19.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire