jeudi 9 août 2018

வெண்பா மேடை - 98


வெண்பா மேடை - 98
  
கொம்பும் காலும் இல்லா வெண்பா!
  
அறிவூட்டும்! ஆற்றல் அணியூட்டும்! நல்ல
உறவூட்டும்! மண்ணுலகம் ஓங்கும் - அறமூட்டும்!
ஒன்றி வதியும் உவப்பூட்டும்! நல்வழி
என்றும் தமிழூட்டும் ஏத்து!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
கொம்புடை எழுத்துகளும் [கெ, ஙெ, செ], கொம்புச்சுழி எழுத்துகளும் [கே, ஙே, சே....] முன்கொம்பு பின் கொம்புக்கால் எழுத்துகளும் [கௌ, ஙௌ, சௌ...] இரட்டைக்கொம்பு எழுத்துகளும் [கை, ஙை, சை...] காலுடைய எழுத்துகளும் [கா, ஙா, சா, டா....], ரகர வருக்க எழுத்துகளும் [ர், ர, ரா, ரீ...] இப்பாடலில் வாரா. இவ்வெழுத்துகள் இன்றி வரும் பாடலைக் கொம்புக்கால் இல்லாப் பாட்டென்பர்!
  
[கொம்புடைய எழுத்துகளும், காலுடைய எழுத்துகளும், ரகர வருக்க எழுத்துகளும் இப்பாடலில் வாரா]
  
விரும்பிய பொருளில் 'கொம்பும் காலும் இல்லா வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து கொம்பும் காலும் இல்லா வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
09.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire