மைக்காரி
கண்டும் காணாக் கண்மணியே - போகும்
காரண மென்ன பொன்மணியே!
வண்டு விழியே மோகினியே - நீ
வாராய் அருகே மாங்கனியே!
மலரும் வண்டும் பேசுதடி - என்
மனதில் காதல் வீசுதடி!
நிலவும் உனைக்கண்(டு) ஏங்குதடி - உன்
நினைவால் ஆசை ஓங்குதடி!
சிரித்துப் பேசும் சிங்காரி - என்
சிந்தை பறிக்கும் ஒய்யாரி!
சுரிகுழல் உற்ற பூக்காரி - விழி
சுழல மயக்கும் மைக்காரி!
2.1.1985
மைக்காரி மயக்கி விட்டாள்
RépondreSupprimerநன்றி ஐயா
Supprimerவணக்கம்
மைக்காரி! மனத்தை மயக்கிச் சுருட்டுகின்ற
கைக்காரி என்பேன் கனிந்து!
மைக்காரியின் அழகை விட
RépondreSupprimerகவிதைதான் ரொம்ப மயக்குது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
Supprimerவணக்கம்!
அழகில் மயங்கி அளித்த கவிதை
அழகியல் காட்டும் அணிந்து!
ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...
RépondreSupprimer
Supprimerவணக்கம்
ஒற்றை வரியெழுதி உள்ளம் கவா்கின்றீா்
கற்ற கலையைக் கணித்து
வணக்கம் ஐயா!
RépondreSupprimerகண்டு வியந்தீரே காரிகையை! பாடலை
உண்டு மகிழ்ந்தேன் உவந்து!
அருமை! ரசித்தேன் மிகவே!
பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!
Supprimerவணக்கம்!
கண்டு களித்த கனிமொழியைச் செந்தமிழாய்
உண்டு களித்தேன் உவந்து!
கொண்டு
மைவிழி கொண்டு மயக்கியவள் வண்ணத்தில்
RépondreSupprimerகைவிரல் தீட்டும் கவி!
அருமை கவிஞர் அண்ணா
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Supprimerவணக்கம்!
மைவிழி தந்த மயக்கத்தால் என்னிதயப்
பைவழிந் தோடுதடா பாட்டு!
அருமையான இசைப்பாடல்.
RépondreSupprimerவாழ்த்துக்கள்!
Supprimerவணக்கம்!
கருமை விழியழகைப் பாடிக் களித்தேன்
பெருமை மொழியழகை பெற்று!
தையலின் மையில் மையலோ
RépondreSupprimerமைவிழியில் வீழ்ந்ததும் கானமோ
அழகிய பாடல் ரசித்தேன் ....!
நன்றி தொடர வாழ்த்துக்கள்....!
Supprimerவணக்கம்!
தையல் விழியிரண்டும் மையல் கொடுத்தெனைத்
தையல் புரிவதேன் சாற்று!
வணக்கம்
RépondreSupprimerஐயா.
மைக்காரியை விட தங்கள் கவிதையின் வரிகள்... எங்களை.. விழிக்கச்செய்கிறது ஐயா.. அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
மைதிட்டும் மந்திரமோ? மாயமோ? என்னுடைய
கைதீட்டும் காதல் கவி
RépondreSupprimerவாக்கெளித்து என்னை மகிழ்வுறச் செய்கின்றீா்
பூக்குளித்துக் காண்டேன் புகழ்
கற்பனை அழகு - அதிலும்
RépondreSupprimerகவிதை அழகு - அதிலும்
சுவை அழகு!
RépondreSupprimerமைக்காரி என்பேனா? உன்னை மயக்கிய
கைக்காரி என்பேனா? கா..மணக்கும் - தைக்காரி
என்பேனா? இன்பத் தமிழ்க்காரி என்பேனா?
என்காரி என்பேன் எடுத்து?