mercredi 1 janvier 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள்




தமிழ் உறவுகளே!
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஒன்றே இறையென்னும் ஓங்கு தமிழ்நெறியை
நன்றே பயின்று நலம்தருக! - இன்தேன்
குலவும் செயல்புரிக! கோலப்புத் தாண்டே!
மலரும் உலகே மணந்து!

எல்லாம் பிறப்பொக்கும் எங்கள் தமிழ்நெறியைப்
பொல்லா நிலைபோகப் போற்றிடுக! - கல்லாக
உள்ளமனம் மாற்றிடுக! துள்ளிவரும் புத்தாண்டே!
வெள்ளைமன மாக விளைந்து!

பெண்ணுரிமை பேணுகின்ற பீடார் தமிழ்நெறியை
மண்ணுரிமை யாக்கி மகிழ்ந்திடுக! - பண்ணினிமை
ஊட்டும் வளந்தருக! ஓடிவரும் புத்தாண்டே!
காட்டும் கருணை கமழ்ந்து!

உண்மை உயர்வுதரும் ஓங்கு தமிழ்நெறியைத்
தண்மை தழைக்கத் தரித்திடுக! - வண்கை
அருளார் அகந்தருக! ஆங்கிலப்புத் தாண்டே!
பொருளார் எழுத்தைப் பொழிந்து!

எல்லாரும் ஒன்றென்னும் ஈடில் தமிழ்நெறியைக்
கல்லாரும் கல்விபெறும் கட்டளையைத்-தொல்லுலகில்
சட்டமெனச் தந்திடுக! தாவிவரும் புத்தாண்டே!
திட்டமென ஒற்றுமையைத் தீட்டு!

யாதும்தன் ஊரென ஓதும் தமிழ்நெறியை
மோதும் நிலத்தில் முழங்கிடுக! - ஊதும்...
உலகே உறவென்று! பூத்த..புத் தாண்டே
நலமே விளைத்திடுக நன்கு!

அன்பே கடவுளெனும் ஆழ்ந்த தமிழ்நெறியை
இன்பே இயற்ற இயம்பிடுக! - பொன்னெனப்
போற்றிப் புகழ்தருக! புத்தாண்டே! தொண்டுலகாய்
மாற்றி வடித்திடுக மாண்பு!

சீர்பூத்த ஓளவை செழித்த தமிழ்நெறியைப்
பார்பூத்(து) ஒளிரப் படைத்திடுக! - நீர்பூத்த
பூங்காடாய் வாழ்வைப் புதுக்கிடுக! புத்தாண்டே!
மாங்காடாய் நற்சுவை வாய்த்து!

காடு மணக்கின்ற கம்பன் தமிழ்நெறியே
நாடு மணக்கின்ற நன்மருந்தாம்! - பீடுறவே
அண்ணனெனத் தம்பியென ஒன்றிடுக! புத்தாண்டே!
வண்ணமுறத் தந்திடுக வாழ்வு!

வள்ளல் பெருமான் வளர்த்த தமிழ்நெறியை
உள்ளம் உணர உரைத்திடுக! - தௌ்ளமுதாம்
சன்மார்க்கம் ஓங்கித் தழைத்திடுக! புத்தாண்டே
பொன்மார்க்க மாகப் பொலிந்து!

01.01.2014

28 commentaires:

  1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பிறந்திட்ட ஆண்டே! பெருமை அனைத்தும்
      சிறந்திட்ட வாழ்வைச் செதுக்கு

      Supprimer
  2. தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா !!!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எங்கும் பரவி இனிய தமிழ்முகில்
      பொங்கும் தமிழைப் பொழி!

      Supprimer
  3. வணக்கம் ஐயா!

    உங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    வல்ல மொழியென வாய்த்த தமிழாகும்!
    நல்ல கவியால் நவின்றீரே! - அல்லல்
    இனியிலை! எம்குரல் எங்கும் ஒலிக்கக்
    கனிந்திடும் காலம் விரைந்து!

    அருமையான வெண்பாக்காளால் அழகுதமிழ்
    வளந்திட, வளர்த்திட ஆக்கங்கள் பல பகன்றீர்கள்!..
    உங்கள் தயவுடன் எங்கள் தமிழ் உயர்ந்திடும் ஐயா!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
    Réponses

    1. எல்லா நலங்களும் எற்றுச் சிறந்திட
      வல்லோன் தருக வரம்!

      Supprimer
  4. வலையுலகில் தங்களது சேவை தொடரட்டும்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்ல இளங்கோ! நறுந்தமிழ்த் தொண்டாற்றி
      வல்ல இளங்கோவாய் வாழ்!

      Supprimer
  5. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தனபாலின் வாழ்வு தழைத்துயர வேண்டி
      மனத்தால் உரைத்தனன் வாழ்த்து!

      Supprimer
  6. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html

    அன்புடன் DD

    RépondreSupprimer
  7. மிக அருமையான கவிதை!

    உங்களுக்கும் இனிய பத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
  8. ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    வெண்பாவில் பத்தாண்டு வேண்டுதல் அனைத்தும் அருமை!

    RépondreSupprimer
  9. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அய்யா!

    RépondreSupprimer
  10. யாதும்தன் ஊரென ஓதும் தமிழ்நெறியை
    மோதும் நிலத்தில் முழங்கிடுக! - ஊதும்...
    உலகே உறவென்று! பூத்த..புத் தாண்டே
    நலமே விளைத்திடுக நன்கு!

    அருமை அருமை....!
    உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!

    RépondreSupprimer

  11. வண்ணப்பா கூறும் வருடப் பிறப்பதுபோல்
    திண்ணமாய் வாழ்ந்து திளைத்திடுவோம் -எண்ணரிய
    இன்பத்தில் இவ்வுலகம் ஈடேறும் ! புத்தாண்டே
    பொன்னாய் உலகில் பொழி

    தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா
    வாழ்க வளமுடன்

    RépondreSupprimer
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    RépondreSupprimer
  13. வணக்கம்
    ஐயா.

    கவிதை மிக அருமையாக உள்ளது... தங்களின் எழுத்துப்பணி மேலும் மேலும் வளர எனது வாழ்துக்கள் ஐயா.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  14. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிஞர் ஐயா!

    RépondreSupprimer
  15. வணக்கம்
    ஐயா.

    த.ம 8வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  16. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  17. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  18. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    RépondreSupprimer
  19. கவிதையில் புத்தாண்டு வாழ்த்துக்கள் அருமை...
    வாழ்த்துக்கள் ஐயா....

    RépondreSupprimer
  20. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  21. உங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer

  22. புத்தாண்டு பூ..மழையா? பொன்மழையா? உள்ளத்துள்
    சித்தாண்டு செப்புகிற சீா்மழையா? - சத்தாண்டு
    துள்ளும் தமிழ்மழையா? துாயகவி பாரதியே!
    சொல்லும் பதிலைத் தொடா்ந்து!

    RépondreSupprimer