பறக்குதடி நெஞ்சம்
எடுப்பு
உன்றன் உருவம் - பாட
உள்ளம் புகுந்ததடி!
என்றன் பருவம் - வாட
ஏக்கம் மிகுந்ததடி!
(உன்றன்)
தொடுப்பு
தென்றல் காற்றே - தமிழ்த்
தேனின் ஊற்றே!
சின்ன நாற்றே - கிளி
சிரிக்கும் கீற்றே!
(உன்றன்)
முடிப்பு
பாடும் குரல்கேட்டுப் பறக்குதடி நெஞ்சம்
- நீ
சூடும் கவிகேட்டுச் சுரக்குதடி மஞ்சம்!
வாடும் நிலைகோர்த்து வளருதடி தஞ்சம் -
நீ
ஆடும் கலைபார்த்து ஆசையலை மிஞ்சும்!
(உன்றன்)
கோடி மலரழகைக் கொண்டொளிரும் பெண்ணே - உனைக்
கூடிக் கற்பனையில் கண்டொளிரும் கண்ணே!
தேடி வருகையிலே தேன்பொழியும் விண்ணே -
உனைப்
பாடிப் பரவுகையில் மணக்குதடி மண்ணே!
(உன்றன்)
ஆகா... ரசிக்க வைக்கும் பாடல் ஐயா...
RépondreSupprimerவாழ்த்துக்கள்...
பாடும் குரல்கேட்டுப் பறக்குதடி நெஞ்சம் - நீ
RépondreSupprimerசூடும் கவிகேட்டுச் சுரக்குதடி மஞ்சம்!
வாடும் நிலைகோர்த்து வளருதடி தஞ்சம் - நீ
ஆடும் கலைபார்த்து ஆசையலை மிஞ்சும்!
ஆஹா... அருமை ஐயா...
அருமையான கவித்தேன்
RépondreSupprimerஆகா... ரசிக்க வைக்கும் பாடல் ஐயா...
RépondreSupprimerவணக்கம்
RépondreSupprimerஐயா.
பாடல்மிக அற்புதமாக உள்ளது... வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பறக்கும் நெஞ்சக் கவியினிலே
RépondreSupprimerகிறக்கம் கொள்ளுதே மனமெல்லாம்
சிறக்கும் என்றும் உம்கவிகள்
பிறக்கும் மானுட மனமெல்லாம் ..!
அழகான பாடல் அருமை கவிஞரே
வாழ்க வளமுடன்
7
என்ன அழகு ! என்ன அழகு !! அற்புதம் ஐயா. ஐயா தங்கள் வாழ்த்துகள் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க ஐயா. நலம் தானே ?
RépondreSupprimerஅருமை
RépondreSupprimer